குடும்பத்தைக் காக்க
லாரி ஓட்டும்
பாகிஸ்தான் முஸ்லிம் பெண்
பொதுவாக வாகனம் ஓட்டுவதில் ஆண்கள்தான் சிறந்து விளங்குவர் என
உளவியல் கூட சொல்கிறது. காலங்காலமாக அடுப்படிக்குள்ளேயே வாழ்ந்து முடித்துவிட்ட பெண்களுக்கு,
புதிதாக வாகனம் ஓட்டுவதால் கொஞ்சம் மேலோட்டமாகவே வாகனம் ஓட்டுவதாகவும், டிராபிக் விதிமுறைகளை
பற்றி எவ்வித முன்யோசனையும் இல்லாதிருப்பதாகவும் சொல்லப்படுவதுண்டு.
ஆனால், சிறப்பாக கனரக வாகனம் ஓட்டுவது மட்டுமின்றி, பாகிஸ்தானின் முதல் பெண்ணாக பொது சேவை வாகனத்தை ஓட்டும் உரிமத்தையும் பெற்றிருக்கிறார், பேகம் ஷமீம் அக்தர் (வயது53). கடந்த 2013-ம் ஆண்டு இவரது கணவர் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பின், குடும்பம் வருமானமின்றிதவித்தது.
பேகம் தமது மூன்று பெண் பிள்ளைகளுக்கும் குறைந்தபட்ச கல்வியை அளித்தது மட்டுமின்றி அவர்களது திருமணச் செலவையும் கவனித்துக் கொண்டார். தற்போது சிறிய அளவில், வாகனப் பயிற்சி அளித்துவரும் அவர், தமது தகுதிக்கு ஏற்ற அரசுப் பணி வழங்குமாறு, நாட்டின் பிரதமர் மற்றும், மாநில முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:
Post a Comment