"உலகின் 25% கைதிகள் அமெரிக்கர்கள்'
வருத்தத்துடன். ஜனாதிபதி  ஒபாமா  தெரிவிப்பு


"உலக மக்கள் தொகையில் அமெரிக்கர்கள் 5 சதவீதத்தினரே பங்கு வகித்தாலும், உலகிலுள்ள கைதிகளின் எண்ணிக்கையில் 25 சதவீதத்தினர் அமெரிக்கர்களாக உள்ளனர்' என அந்த நாட்டு ஜனாதிபதி ஒபாமா வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
 அமெரிக்க சட்டத் துறை சீர்திருத்தம் குறித்து நியூ ஜெர்ஸியில் அவர் நேற்று முன் தினம் திங்கள்கிழமை பேசியிருப்பதாவது:

 அமெரிக்காவில் 22 லட்சம் பேர் சிறைக் கைதிகளாக உள்ளனர்.  உலக மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் அதிக அளவாகும்.  உலக மக்களில் வெறும் 5 சதவீதத்தினரே அமெரிக்காவில் வசிக்கின்றனர். எனினும், உலகெங்கும் சிறையில் அடைக்கப்பட்டவர்களில் 25 சதவீதத்தினர் அமெரிக்கர்களாக உள்ளனர். இவ்வாறு வருத்தத்துடன். ஜனாதிபதி  ஒபாமா  தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top