தென்கிழக்குப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ்
ஏற்பாடு செய்திருந்த முஸ்லிம்கள் பற்றிய கவனஈர்ப்பு போராட்டம்
தென்கிழக்குப் பல்கலைக் கழக முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு போரட்டம் மற்றும் முஸ்லிம் மஜ்லிஸ் கண்டன பேரணியும். இன்று புதன்கிழமை (04:11:2015) இடம்பெற்றது.
இரண்டு வருட நல்லாட்சி காலத்தினுள் முஸ்லிம்களை மீளக்குடியமர்த்து.
வட மாகாண சபையே ஏன் முஸ்லிம்கள் விடயத்தில் மெளனம்?
மத வன்முறையினால் பாதிக்கப்பட்ட அளுத்கம சம்பவத்திற்கான விசாரணை எப்போது?
சமாதான பேச்சு வார்த்தைகளில் முஸ்லிம்களையும் சமதரப்பாக ஏற்றுக்கொள்.
யுத்த குற்ற விசாரணைகளை 1985 ஆம் ஆண்டிலிருந்து நடத்து.
என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கவனஈர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் ஏந்தியிருந்தனர்.
என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கவனஈர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் ஏந்தியிருந்தனர்.
இக் கவனஈர்ப்பு போராட்டத்தில் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவிகள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டிருந்தனர்.
முஸ்லிம் தேசம் பற்றிய பிரச்சினையை உலகறியச் செய்த தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் சமூகம் மீண்டும் ஒருமுறை இந்நாட்டின் தனித் தேசிய இனமான முஸ்லிம்கள் பற்றியதொரு கவனஈர்ப்பு ஒன்று கூடலை இவ்வாறு ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment