பூனை பற்றிய எடின்பர்க் பல்கலைக் கழக
ஆராய்ச்சியாளர்களின் அதிர்ச்சியளிக்கும் செய்தி


வீட்டில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் விலங்குகளில் ஒன்று பூனை. குறும்பும் விளையாட்டுமாக இருப்பதால் மனிதர்களின் மனத்தில் முக்கியமான இடத் தை அது பெற்றிருக்கிறது.
சமீபத்தில் எடின்பர்க் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் பூனை  பற்றிய அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்றைச்  சொல்லியிருக்கிறார்கள். அழகாகவும் ஆபத்தில்லாததாகவும் காட்சியளிக்கும் உங்கள் செல்லப் பூனையின் கண்களில் தெரியும் பொறி, ஓர் உயிரைக் கொல்லும் உணர்வாக இருக்கலாம். சிங்கம், சிறுத்தை, புலி போன்ற விலங்குகள் பூனை குடும்பத்தைச் சேர்ந்தவை.
காட்டுப் பூனைகளின் குணமான ஆதிக்கம் செலுத்தும் பண்பு, உணர்ச்சிவசப்படக்கூடிய இயல்பு,  தாக்குதல் தொடுக்கும் மனம் போன்றவை வீட்டுப் பூனைகளுக்கும் இருக்கும்.
வீட்டுப் பூனைகள் அளவில் சிறியதாக இருப்பதால் மனிதர்களைக் கொல்ல முயற்சி செய்வதில்லை. ஆனால் பூனைகளை செல்லப் பிராணி என்ற கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்காமல்,

மற்ற விலங்குகளைக் கொன்று சாப்பிடக்கூடிய ஒரு சிறிய விலங்கை வீட்டில் வளர்க்கிறோம் என்ற கவனம் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்கிறார்கள்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top