அமெரிக்க டாலரில் உள்ள 'கடவுள் மீது நம்பிக்கையாக'

என்ற வாசகத்தை நீக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு


அமெரிக்க அரசியல் சாசனத்துக்கு எதிராக நாட்டின் பண தாள்களில் உள்ள (IN GOD WE TRUST) 'கடவுள் மீது நம்பிக்கையாக' என்ற வாசகத்தை நீக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஸ்கார்மெண்டோ பகுதியில் வசிக்கும் மருத்துவம் மற்றும் வழக்கறிஞர் தொழில் செய்து வரும் மைக்கேல் நியூடௌ உள்ளிட்ட பலர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க டாலர் பணத்தில் அச்சடிக்கப்பட்டுள்ள 'கடவுள் மீது நம்பிக்கையாக' என்ற வாக்கியம் கடந்க 1993 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மத சுதந்திர சட்டத்துக்கு எதிராக உள்ளது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அது மாத்திரமல்லாமல், அந்த வாசகம் கிறிஸ்துவ ஏகத்துவத்தை நிலைநிறுத்தும் வகையில் உள்ளது என்றும் கூறியுள்ளனர்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top