கோழிக்கு பதிலாக கோழிக் கழிவு

வாடிக்கையாளரிடம் மன்னிப்பு கேட்ட கே.எப்.சி



பன்னாட்டு உணவு நிறுவனமான கே.எப்சி-யின் கலிபோர்னியா மாநில கிளையில் கோழிக்கு பதிலாக எலியை பொரித்துக் கொடுத்த சம்பவம் கடந்த ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது கோழிக்கு பதிலாக கோழிக் கழிவுகள் பரிமாறப்பட்டுள்ள சம்பவம் வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த மருந்தாளரான (pharmacist) கசாண்ட்ரா ஹாரிஸ்(22), கொடும்பசியில் கோழிக்கறி சாப்பிடலாம் என்று வெலிங்போராவில் உள்ள நார்த்தாண்ட் கிளைக்கு சாப்பிடச் சென்றுள்ளார். 6 பவுண்ட் செலுத்தி ஜிங்கர் டவர் மீல் எனப்படும் கோழி இறைச்சி உணவையும் பர்கரையும் ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்த சில நிமிடங்களில் அவருக்கான உணவுத்தட்டு வந்தது. ஆனால் அதில் கோழிக்கு பதிலாக மூளை, இரைப்பை போன்ற கோழிக்கழிவுகள்தான் இருந்தது.
இது குறித்து ஹாரிஸ் அளித்துள்ள பேட்டியில், “அது பிங்க் நிறத்தில் பார்க்கவே கேவலமாக இருந்தது. நான் அதை தொடக்கூட விரும்பவில்லை. பார்பதற்கு மூளை அல்லது நுரையீரலின் பச்சை மாமிசம் போல் அது இருந்தது. எனது பர்கரில் கூட தலைமுடி இருந்தது. நிச்சயமாக என் வாழ்நாளில் இனி ஒரு போதும் இனி கே.எப்.சி உணவகத்தில் சாப்பிட மாட்டேன்.” என்று கூறியுள்ளார்.

அண்மையில்தான் நடந்த இந்த விவகாரம் குறித்து மன்னிப்பு கேட்டுள்ள கே.எப்.சி நிர்வாகம் இது ஒரு விபத்து என்று குறிப்பிட்டுள்ளது. “நீக்கப்பட வேண்டிய நேரத்தில் கோழியின் கழிவுகள் நீக்கப்படாமல் போவதால் மிகவும் அரிதான தருணங்களில் எதிர்பாராதவிதமாக இது போன்ற தவறுகள் நடந்து விடுகிறது. வருங்காலத்தில் உணவின் சுகாதாரம் குறித்து கூடுதல் அக்கறையுடன் இருக்குமாறு எங்கள் ஊழியர்களுக்கு நினைவு படுத்தியுள்ளோம். வாடிக்கையாளர்கள் உணவில் ஏதேனும் குறை இருந்தால் எங்களிடம் உடனடியாக தெரியப்படுத்துமாறும் கேட்டுக் கொள்கிறோம்.” என்று கூறியுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top