ஜனாதிபதியிடம் எம்.கே.டி.எஸ்.குணவர்தன விடுத்த
இறுதி வேண்டுகோள்?
காலம்
சென்ற எம்.கே.டி.எஸ் குணவர்தன,
ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேனவிடம் விடுத்த இறுதி வேண்டுகோள் குறித்து
ஊடகமொன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
குணவர்தன
இறுதியாக பங்கேற்ற
அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த வேண்டுகோளை முன்வைத்திருந்தார்
எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
திருகோணமலை
மாவட்டத்தின் சிரேஸ்ட அரசியல்வாதிகளில் ஒருவராக விளங்கிய
குணவர்தன, கந்தளாய்
வீதிகளை புனரமைத்துத்
தருமாறு ஜனாதிபதியிடம்
இறுதியாக கோரியுள்ளார்.
“கந்தளாயில்
அநேக வீதிகள் பழுதடைந்துள்ளன.
அவற்றை துரித
கதியில் புரமைக்க
வேண்டும்” என
குணவர்தன அந்தக் கோரிக்கையில் தெரிவித்திருந்தார்.
“ இதற்குத்தான்
நாம் உங்களுக்கு
அமைச்சரவை அந்தஸ்துடைய
அமைச்சுப் பதவி
வழங்கியுள்ளோம். இப்போது அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதனால் உங்களினால் பிரச்சினையின்றி
அபிவிருத்திப் பணிளை மேற்கொள்ள முடியும்.
உங்களுக்கு
அந்த பக்கத்தில்
பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல இருக்கின்றார்,
அவருடன் பேசி
வீதிகளை புனரமைத்துக்
கொள்ளவும்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
அதற்கு
பதிலளித்துள்ளார்.
இந்தக்
கோரிக்கைக்கு உடனடியாக அமைச்சர் லக்மஸ்மன் கிரயெல்லவும்
சம்மதம் வெளியிட்டுள்ளார்.
எவ்வாறெனினும்,
ஊடல் நலக்
குறைவு காரணமாக
எம்.கே.டி.எஸ் குணவர்தன நீண்ட
நேரம் அமைச்சரவைக்
கூட்டத்தில் இருக்கவில்லை.
“ சேர்,
எனக்கு இன்னமும்
பூரண குணமடையவில்லை.
இன்னமும் உடலுக்கு
கஸ்டமாகவே உள்ளது.
இதனால் நான்
சற்றே வேளைக்கே
வீடு செல்கின்றேன்”
என ஜனாதிபதியிடம்
கூறி அமைச்சரவைக்
கூட்டம் நிறைவடையும்
முன்னர் குணவர்தன
வெளியேறிச் சென்றார் எனவும், அதுவே அவர்
பங்கேற்ற இறுதி
அமைச்சரவைக் கூட்டம் எனவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment