சிறைச்சாலை
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள
ஞானசார தேரரை சந்திப்பது மட்டுபடுத்தப்பட்டுள்ளது
விளக்க
மறியலில் வைக்ககப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார
தேரரை சந்திப்பது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஞானசார
தேரர் தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து
வைக்கப்பட்டுள்ளார். வெலிக்கடைச் சிறைச்சாலை வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அனுமதி
பெற்றுக் கொண்டவர்களுக்கு மட்டும் ஞானசார தேரரை சந்திக்க அனுமதி வழங்குவதற்கு சிறைச்சாலை
திணைக்களம் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
ஞானசார
தேரரை பார்வையிடுவதாகத் தெரிவித்து தேவையற்ற வகையில் சிறைச்சாலை வளாகத்தில் கூடி குழப்பங்களை
விளைவித்து, பிரச்சினை ஏற்படுத்த சில தரப்பினர் முயற்சிக்கின்றனர்.
இதன்
காரணமாக ஞானசார தேரரை சிறைச்சாலை வைத்தியசாலையில் பார்வையிடுவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது
என சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாள்
ஒன்றுக்கு மூன்று பேர் மட்டுமே ஞானசார தேரரை சந்திக்க முடியும் எனவும் அவர்களும், ஞானசார
தேரரின் அனுமதியைப் பெற்றுக் கொண்டவர்களாக இருக்க வேண்டுமெனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டத்தரணிகளுக்கு இந்த வரையறை கிடையாது, அவர்கள் ஞானசார
தேரரை பார்வையிட முடியும் என தெரிவித்துள்ளனர்.
பெரும்
எண்ணிக்கையிலானவர்கள் ஞானசார தேரரை பார்வையிடுவது அவரது உடல் நலனையும் பாதிக்கும் என
சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஞானசார தேரருக்கு உயர் இரத்த அழுத்தம் காணப்படுவதாகவும்,
இன்னமும் வழமை நிலைமைக்கு திரும்பவில்லை எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்,
ஹோமாகம
நீதிமன்றில் அரசாங்க அதிகாரிகளை அச்சுறுத்தியமை, நீதிமன்றை அவமரியாதை செய்தமை ஆகிய
குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான ஞானசார தேரர், விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment