புரூணை
ராணியின் சகோதரியிடம் அறுவை சிகிச்சைக்காக
12 மில்லியன் பவுண்டு கட்டணம் வசூலித்த
சிங்கப்பூர் மருத்துவர்!
சிங்கப்பூரின் பிரபல மருத்துவர்
ஒருவர் அரச குடும்பத்தைச் சேர்ந்த நபருக்கு அறுவை சிகிச்சைக்காக 12 மில்லியன்
பவுண்டு கட்டணம் வசூலித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூரின்
பிரபல மருத்துவரான சூசன் லீ கடந்த
1990 ஆம் ஆண்டு உலகின் முதல்
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை
வெற்றிகரமாக முடித்து பெயர் பெற்றவர்.
இவரது
சேவையை பெற்றுக்கொள்ள முடிவு செய்த புரூணை
ராணியின் சகோதரி கடந்த 2007 ஆம்
ஆண்டு தமது மார்பக புற்றுநோய்
சிகிச்சைக்காக மருத்துவர் லீயை அணுகியுள்ளார்.
தொடர்ந்து
ஆறு மாதம் சிகிச்சை தேவைப்படும்
என தெரிவித்த மருத்துவர் லீ, கட்டணமாக 12 மில்லியன்
பவுண்டு வசூலித்துள்ளார்.
இதுகுறித்த
தகவல்கள் கசியத்துவங்கியதும் கடந்த 2012 ஆம் ஆண்டு சிங்கப்பூர்
மருத்துவ கவுன்சிலானது மருத்துவர் லீ மீது விசாரணை
குழுவினை அமைத்துள்ளது.
விசாரணையின்
முடிவில் மருத்துவர் லீ வழக்கத்திற்கு மாறாக
அதிக கட்டணம் வசூலித்துள்ளது மருத்துவ குழுவினரால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து
சிங்கப்பூர் மருத்துவ கவுன்சில் அவரை
3 ஆண்டுகளுக்கு மருத்துவ தொழிலில் ஈடுபட தடை விதித்தது.
அவருக்கு
5000 பவுண்டு அபராதம் விதித்ததுடன், வருங்காலங்களில் நேர்மையாக நடந்து கொள்ளவும் உறுதி
வாங்கியுள்ளது.
இதனிடையே
சிங்கப்பூர் மருத்துவ கவுன்சில் விதித்த தடையை ரத்து செய்யக்கோரி
அங்குள்ள உயர் நீதிமன்றத்தை நாடிய
மத்துவர் லீ ஏமாற்றமடைந்தார்.
இந்நிலையில்
லண்டன் மருத்துவ கவுன்சிலில் உறுப்பினரான மருத்துவர் லீ மீது அந்த
அமைப்பு புதிய விசாரணையை தொடங்கியுள்ளது.
லண்டன்
அமைப்பின் விசாரணையில் மருத்துவர் லீ குற்றவாளியென உறுதியானால்
வாழ்நாள் தடை அவருக்கு விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment