பிரதி
அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் முகநூலில் இருந்து…………
சாய்ந்தமருதின்
தெற்கு எல்லையில்
பெயர் பலகை நிறுவ பணிப்பு
HMM Harees
December 17,
2013
சாய்ந்தமருது-
மாளிகைக்காடு வர்த்தக சங்க பிரதிநிதிகளுக்கும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்
கல்முனை அபிவிருத்திக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸிக்கும் இடையிலான
சிநேகபூர்வ சந்திப்பு இன்று December 15, 2013 (15) காலை பாராளுமன்ற உறுப்பினரின் சாய்ந்தமருது அலுவலகத்தில்
இடம்பெற்றது.
இதன்போது
சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவின் வடக்கு மற்றும் தெற்கு எல்லைகள் காலத்துக்கு காலம்
அபகரிக்கப்பட்டு வருவது தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டதுடன் இந்நிலை மேலும் தொடராமல்
தடுப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையால் ஒவ்வொரு ஊருக்கும் நிறுவப்படும் பெயர்ப்
பலகையை சாய்ந்தமருதுக்கும் நிறுவி இவ் எல்லைகள் மேலும் அபகரிக்கப்படுவதனை தடுக்குமாறு
கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை
ஏற்றுக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் உடனடியாக மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபை பிரதம
பொறியியலாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இப்பெயர்ப் பலகையை உடன் நிறுவுவதற்கான பணிப்புரையை
விடுத்தார்.
மேலும்
சாய்ந்தமருது மத்தியில் காணப்படும் தோனாவை அபிவிருத்தி செய்வதுடன் வொலிவேரியன் கிராமத்துக்கு
செல்லும் பிரதான பாதையில் அமைந்துள்ள பாலத்தினை விஸ்தீரணப்படுத்தி கொங்ரீட் பாலமாக
மாற்றித்தருமாறும் அத்துடன் அதன் இடப்புறமாக ஆற்றின் கிழக்குப் புறப் பாதையினை நிர்மானிக்குமாறும்
கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கான
நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.
ஹரீஸ் உறுதியளித்தார்.
சாய்ந்தமருது
பிரதேச சுயதொழில் முயற்சியாளர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் நலன்களை
கருதிற் கொண்டும் அவர்களின் பொருட்களுக்கான சந்தை வாய்ப்பினை அதிகரிக்கும் பொருட்டு
எமது பிராந்தியத்தில் ஒரு வர்த்தக கண்காட்சியினை ஏற்பாடு செய்வதன் மூலம் தேசிய ரீதியில்
எமது பிரதேச பொருட்களுக்கான கேள்வியினை அதிகரிக்கச் செய்ய முடியும்.
அத்தோடு
பொருளாதார அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் அமைச்சின் உதவிகளை இதற்காக என்னால் பெற்றுத்தர
முடியும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் இதன்போது தெரிவித்தார்.
இச்சந்திப்பின்போது
பாராளுமன்ற உறுப்பினரின் 2014ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து சங்கத்தின்
பயன்பாட்டுக்கென கணணித் தொகுதி ஒன்றும் வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினரால் உறுதியளிக்கப்பட்டது.
இச்சந்திப்பில்
சாய்ந்தமருது, மாளிகைக்காடு வர்த்தக சங்கத்
தலைவர் அல்-ஹாஜ் எஸ்.எச்.எம்.நஸீர், இணைச் செயலாளர் யூ.சத்தார், கணக்குப் பரிசோதகர்
எம்.எப.எம்.வாசித், உறுப்பினர் எம்.எம்.ஜெலீல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment