மறைந்த  எம்.கே.டி.எஸ். குணவர்தனவின் இடத்திற்கு

ரோசி சேனநாயக்கவா சரத் பொன்சேகாவா?

அசாத் சாலி, ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆகியோர்களின்

பெயர்களும் சிலரால் உச்சரிப்பு


மறைந்த  காணி அமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்தனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்க அல்லது முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்கு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
எனினும், அந்த இடத்திற்கு ரோசி சேனாநாயக்கவை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டும்  வருகின்றது.
ஏற்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுவிட்சர்லாந்து விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியதும் தீர்மானிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணிக்கு கிடைக்கப் பெற்ற தேசியப் பட்டியல் ஆசனமொன்றின் ஊடாக எம்.கே.டி.எஸ். குணவர்தன நாடாளுமன்றிற்கு தெரிவாகியிருந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்ரம ஆகியோர் வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
இவர்கள் நாடு திரும்பியதும் குறித்த தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடம் பற்றி தீர்மானம் எடுக்கப்படும் கபீர் ஹாசீம் பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இப்பதவிக்கு அசாத் சாலி, ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆகியோர்களின் பெயர்களையும் சிலர் உச்சரித்தும் கொண்டிருக்கின்றனர்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top