சவூதியில் ஜனவரி மாதத்தில் இன்று வரை
53 பேருக்கு மரண தண்டனை!
சவூதி அரேபியாவில் ஜனவரி மாதத்தில் இன்று வரை 53 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்று 25 ஆம் திகதி (திங்கள்) கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முஹம்மது பின் அவாத் அல்-ஸஹ்ரானி என்பவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இவர் தனது இனக்குழுவைச் சேர்ந்த ரியாத் பின் சயீத் அல் ஸஹ்ரானி என்பவரை தகராறு ஒன்றில் கொலை செய்ததாக மரண தண்டனை விதிக்கப்பட்டவர்.
இந்நிலையில் முஹம்மது பின் அவாதுக்கு இன்று மேற்கு மாகாணமான ஜித்தாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
பாரம்பரிய முஸ்லிம் நாடான சவூதி அரேபியாவில் மரண தண்டனை என்பது தலையைத் துண்டித்து நிறைவேற்றப்படுவதாகும்.
இதன் மூலம் 2016 ஜனவரி மாதத்தில் இன்று வரை 53 பேருக்கு சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் போதை மருந்து கடத்தல் அல்லது கொலை குற்றவாளிகள் 153 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
2015-ல் சவூதியின் மரண தண்டனை நிறைவேற்றம் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கை என்று ஆம்னெஸ்டி கூறுகிறது.
சவூதி கடைபிடிக்கும் இஸ்லாமிய சட்டவிதிகளின்படி, கொலை, பலாத்காரம், மதவிரோதம், போதை மருந்து கடத்தல், ஆயுதங்களுடன் கொள்ளை அடிப்பது ஆகிய குற்றங்கள் மரண தண்டனை விதிக்கத் தக்கதாகும்.
0 comments:
Post a Comment