அமெரிக்காவில் கடுமையான பனிப்புயல்

 16பலி! மக்கள் வீடுகளில் முடக்கம்!!


அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பனி புயல் காரணமாக 16 பேர் பலியாகியுள்ளனர் என்று கூறப்படுகிறது. மற்றும் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜொனாஸ்(Janas) என்று பெயரிடப்பட்டுள்ள பனி புயலின் காரணமாக அமெரிக்காவில் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போய் உள்ளது்
8700 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவின் 10 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பனி பொழிவு தொடர்ந்து வருவதால் பல்வேறு பகுதிகளிலும் 2 அடிக்கு பனி சேர்வதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வாஷிங்டன் பகுதியில் 4 அடிக்கு பனி குவியலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 85 மில்லியன் மக்கள் தங்களின் வீடுகளில் முடங்கியுள்ளனர். 1 லட்சத்து 70 ஆயிரம் பேர்கள் வரை மின்சார வசதி இல்லாமல் தவித்து வருகின்றனர். பனியின் காரணமாக ஆயிரம் விபத்துக்கள் வரை ஏற்பட்டுள்ளன  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசரகால வாகனங்கள் தவிர பிற வாகனங்களை இயக்குபவர்கள் கைது செய்யப்படுவர் என்று அந்நாட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது..
பனிப்பொலிவால் ஏராளமான வாகன விபத்துகள் ஏற்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். பென்சில்வேனியா மாகாணத்தில் 500 வாகனங்கள் எங்கும் நகர இயலாதபடி சிக்கியுள்ளதாக சி.என்.என். செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

மத்திய அட்லாண்டிக் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த தாழ்வழுத்த நிலை காரணமாக இந்தப் பனிப்பொழிவு நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. வாஷிங்டன் டிசி, பாலிட்மோர், ப்ளூ ரிட்ஜீ மலைப் பகுதிகளில் அதிக அளவு பனிப்பொழிவு இருக்கும். இதுதவிர சில கடற்கரைப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படவும் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top