இந்திய விமானம் தாங்கிக் கப்பலை பார்வையிட்ட
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன
இந்தியாவில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ள அதி நவீன விமானம்தாங்கிக் கப்பல் ஐ என் எஸ் விக்கிரமாதித்தியாவை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று பார்வையிட்டுள்ளார். ஜனாதிபதிக்கு கப்பலில் சிறப்புவரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட கப்பலிற்குள் சென்ற முதலாவது வெளிநாட்டு தலைவர் இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன என கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா நல்லெண்ணப் பயணமாக நேற்று முன்தினம் கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment