நாடாளுமன்றத்தில் தமது கருத்துக்களுக்கு

உரிய இடம் தரப்படுவதில்லையாம்!

கூட்டு எதிர்க்கட்சி சர்வதேசத்திடம் முறையீடு?


நாடாளுமன்றத்தில் தமது கருத்துக்களுக்கு உரிய இடம் தரப்படுவதில்லை என்று கூட்டு எதிர்க்கட்சி முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
இந்த முறைப்பாடு தொடர்பில் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் சுவிட்ஸர்லாந்தில் உள்ள அனைத்து நாடாளுமன்ற அவைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.
நாடாளுமன்றத்தில் தமது தரப்பின் அரசியல் தலைவர்களுக்கு கருத்துக்களை கூற வாய்ப்புக்கள் வழங்கப்படுவதில்லை. இது எதிர்க்கட்சியின் தரப்புக்கு மேற்கொள்ளப்படும் அநீதியான செயலாகும் என்று அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இக்கடிதத்தில் தேசியப்பட்டியலில் மேற்கொள்ளப்பட்டுள்ள துஸ்பிரயோக நடவடிக்கைகளும் இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளனவாம்.

இந்த கடிதத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களான டளஸ் அழகப்பெரும, மஹிந்தானந்த அளுத்கமகே, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, பந்துல குணவர்த்தன, காமினி லொக்குகே மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனராம். எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச கையெழுத்திடவில்லையாம்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top