கல்முனையில் தேசிய பாடசாலை ஒன்றில் பண மோசடி
குற்றப் பத்திரிகை தாக்கல்
கல்முனைப்
பிரதேசத்திலுள்ள தேசிய பாடசாலை ஒன்றில்
இடம்பெற்றதாகக் கூறப்படும் பண மோசடி தொடர்பில்
அப்பாடசாலையின் ஓய்வுபெற்ற அதிபர் ஒருவருக்கு எதிராக
அரச சேவைகள் ஆணைக்குழு குற்றப் பத்திரத்தைவழங்கியுள்ளதாக
. அறிவிக்கப்படுகிறது
ஓய்வூதியப்
பிரமாணக் குறிப்பின் 12ஆம் பிரிவுக்கமைவாக இக்குற்றப்
பத்திரம் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆயிரம்
பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இப்பாடசாலைக்கு ஒதுக்கப்பட்ட
நிதியில் சுமார் நான்கு இலட்சம்
ரூபா மோசடி செய்யப்பட்டிருப்பதாக ஆரம்ப கட்ட
புலனாய்வு விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
இந்த
மோசடியானது அப்பாடசாலையில் கல்வி கற்பிக்கும் சில
ஆசிரியர்களின் பெயரில் காசோலையாக எழுதப்பட்டு, அவை வங்கியில் மாற்றப்பட்டு
பணம் பெறப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
இம்மோசடி
தொடர்பில் அவ்வேளையில் கல்முனை வலய திட்டமிடல் பிரதிக்
கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய அதிகாரி ஒருவர் தனது அவதானிப்பு
அறிக்கையை சமர்ப்பித்ததன் காரணமாக அவ்வதிகாரி மீண்டும் ஒருமுறை அப்பாடசாலைக்கு கடமை நிமித்தம் சென்றபோது
சிலரினால் தாக்கப்பட்டமையும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.
நன்றி:-
தமிழ்வின்
0 comments:
Post a Comment