சல்மான் தேசியப் பட்டியல் விவகாரம்
இலக்கு எதுவோ அதனை முஸ்லிம் காங்கிரஸ்
சரியாக நடைமுறைப்படுத்திக் காட்டவேண்டும்.
தேசியப் பட்டியல் உருவாக்கப்பட்டதன் இலக்கு எதுவோ அதனை முஸ்லிம் காங்கிரஸ் சரியான முறையில் நடைமுறைப்படுத்திக் காட்ட வேண்டும். சமூகத்தில் உள்ள சிறந்த கல்வி அறிவு படைத்த ஒருவரை நாடாளுமன்றம் அனுப்பிவைக்க வேண்டும். இதன் மூலம்
கட்சிக்குள் தோன்றியிருக்கும் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்ல எத்தனிப்பவர்களின்
பேராசைகளுக்கும் போராட்டங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலில் உள்ள முஸ்லிம்
காங்கிரஸின் சர்ச்சைக்குரிய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒன்றான டாக்டர் ஏ.ஆர்.ஏ
ஹபீஸ் வகித்து வந்த எம்.பி. பதவியை கிட்டத்தட்ட
5 மாதங்களுக்குப் பின்னர் இராஜினாமாச் செய்யுமாறு கோரி அவரின் இடத்திற்கு முஸ்லிம் காங்கிரஸுக்கு வெற்றிடமாகவுள்ள திருகோணமலை
மாவட்டத்திற்கு பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் எம்.எஸ். தெளபீக் அவர்களுக்கு வழங்கியதன்
மூலம் கட்சித் தலைமைத்துவம் ஏதோ ஒரு வகையில் சரியான முடிவை எடுத்திருக்கின்றது என்ற
முடிவால் மக்களிடத்தில் அமைதி காணப்பட்டு ஆறுதலைப்
பெற்றது போல் காணப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலில் உள்ள முஸ்லிம்
காங்கிரஸின் சர்ச்சைக்குரிய இரண்டாவது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகித்துக் கொண்டிருக்கும்
சட்டத்தணி முஹமட் ஹபீர் முஹமட் சல்மான் தனது பதவியை இராஜினாமாச் செய்வதன்
மூலம் அவரின் வெற்றிடத்திற்கு யாரை நியமிப்பது என்பதில்தான் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவமும்
கட்சியும் பல சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும்
என அரசியல் அவதாணிகள் பல கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர்.
கட்சியின் செயலாளர் எம்.ரி.ஹஸனலி, கட்சியின் தவிசாளர் பஸீர்
சேகுதாவூத், கட்சியின் ஸ்தாபக செயலாளரும் மூத்த போராளியும் அட்டாளைச்சேனையைச் சேர்ந்தவருமான
சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர், அப்துர் ரஹ்மான், ஹாபீஸ் நஸீர் போன்றவர்கள் தேசியப் பட்டியல்
பதவிக்கு அதிகமாக பேசப்பட்டு வருகின்றார்கள். இவர்களில் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில்
கட்சிக்கு முக்கியமானவர்கள்தான்.
இவர்கள் எல்லோரும் கட்சிக்கு பங்களிப்பைச் செய்திருக்கலாம்.
ஆனால் இவர்கள் எல்லோரையும் ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் அனுப்பி திருப்தி படுத்திவிட முடியாது. அதனால் கட்சியும் கட்சித் தலைமைத்துவமும்
பாரிய பிரச்சினைகளை எதிர் நோக்கவேண்டியிருக்கும் எனக் கூறப்படுகின்றது
கட்சி பிளவுபட்டு தாவல்களைத் தவிர்ப்பதற்கும் கட்சி தலைமைத்துவம்
பாரிய சிக்கல்களிலிருந்து விடுபடுவதற்கும் கட்சி தலைமைத்துவத்திற்கு இருக்கும் ஒரே
ஒரு வழி கட்சி முக்கியஸ்த்தர்களிடையே உள்ள தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் நுழையும்
போருக்கு சரியான ஒரு முடிவைக் கொண்டு வரல் வேண்டும் என்பதாகும்.
இதற்கு தேசியப் பட்டியல் உருவாக்கப்பட்டதன் இலக்கு எதுவோ அதனை
முஸ்லிம் காங்கிரஸ் சரியான முறையில் நடைமுறைப்படுத்திக்
காட்ட வேண்டும். சமூகத்தில் உள்ள சிறந்த கல்வி
அறிவு படைத்த ஒருவரை நாடாளுமன்றம் அனுப்பிவைக்கமுடியும்.
அதுவரையும் சட்டத்தணி முஹமட் ஹபீர் முஹமட் சல்மான் அவர்களை இராஜினாமாச்
செய்ய விடாமல் வைத்திருப்பதே கட்சியைக் காப்பதற்கும் கட்சித் தலைமை தேசியப் பட்டியல்
விவகாரமாகச் சிக்கலிலிருந்து விடுபட்டிருப்பதற்கும் தற்போதிருக்கும் சரியான ஒரே ஒரு வழியாகும்.
0 comments:
Post a Comment