தெமட்டகொடயில்
கார் முட்டி மோதி
படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும்
விவகாரம்
தாய், மகன் இருவருக்கும் பிணை
தெமட்டகொடையில், பாதசாரி கடவையை கடக்க முயன்ற தாயையும் மகளையும் தங்களுடைய காரில் முட்டிமோதி படுகொலைச்செய்ததாக கூறப்படும் அக்காரின் சாரதியாக செயற்பட்ட 15 வயதான மொஹமட் பாரூக் மற்றும் அவருடைய தாயான ஷகீலா பானு ஆகிய இருவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது. தலா 10,000 ரூபாய் பணம் மற்றும் 10 இலட்சம் ரூபாய் சரீர பிணையில் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தெமட்டகொட, பேஸ்லைன் வீதியில் புகையிரத விளையாட்டு மைதானத்துக்கு அருகில் ,கடந்த 16 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 8.50 மணியளவில் பாதசாரி கடவையை கடக்க முயன்ற கொழும்பு-08 பேஸ்லைன் வீதி, ரி20 தோட்டத்தை வசிப்பிடமாகக் கொண்ட 47 வயதான வீரசிங்ஹ ஆராச்சிலாகே அனுலா, அவரின் 10 வயது மகளான சமாதி ரஷ்மிகா ஆகிய இருவரையும் தங்களுடைய காரில் முட்டிமோதி படுகொலைச் செய்ததாக அவ்விருவரும் கைது செய்யப்பட்டனர்.
இவ்விபத்தில், படுகாயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தனர்.
இவ்விருவரும், இரவு நேர உணவினைப் பெற்றுக்கொள்வதற்கென
சாப்பாட்டுக் கடைக்குச் செல்வதற்காக பாதசாரி கடவையில் வீதியை கடந்துகொண்டிருந்த
கொண்டிருந்த போதே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
விபத்துச் சம்பவத்துடன் தொடர்புடைய சிறுவனையும் சிறுவனின் தாயையும் கைது செய்த பொலிஸார், அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில் சிறுவனின் தாயே,
காரினைச் செலுத்திச் செல்வதற்கான அனுமதியினை வழங்கியதுடன், காரின் சாவியையும் வழங்கியிருந்தாகவும் தெரியவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment