விருப்பு வாக்குகளை
பற்றி சிந்திக்காது
தேசிய நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு
பாடுபடுவது அரசியல்வாதிகளின் பொறுப்பாகும்
– புத்தளத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்க்கும்போது விருப்பு வாக்குகளை பற்றி சிந்திக்காது தேசிய நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு பாடுபடுவது அரசியல்வாதிகளின் பொறுப்பாகுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.
நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலில் அல்லது 5 ஆண்டுகளின் பின் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் பற்றி சிந்திக்காது பொதுமக்களுக்காக நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகளை உரிய நேரத்தில் நிறைவேற்றுவதற்கு பாடுபடுமாறு ஜனாதிபதி அவர்கள், அமைசர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார்.
புத்தளம் சாலியவெவ மாதிரி மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய தொழில்நுட்ப ஆய்வுகூடத்தினை மாணவர்களிடம் கையளிக்கும் வைபவம் இன்று 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் இடம்பெற்றபோதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் இக்கோரிக்கையை விடுத்தார்.
விருப்புவாக்கு இல்லாதுபோகும் என்ற அச்சத்தினால் மக்களின் நன்மைக்காக மேற்கொள்ளப்படவேண்டிய தீர்மானங்களை காலந்தாழ்த்தக் கூடாதென தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அபிவிருத்தியின்போது சரியான தீர்மானங்களை மேற்கொள்ள எவரும் அச்சம்கொள்ளத் தேவையில்லையெனக் குறிப்பிட்டார்.
நாடு பூராக நிலவும் ஆசிரியர் பிரச்சினை தொடர்பாக கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், மேலதிகமாக உள்ள ஆசிரியர்களை வெற்றிடம் நிலவும் பிரதேசங்களுக்கு இடமாற்றம் செய்வதற்கு உரிய தீர்மானங்களை மேற்கொள்ளுதல் அத்தியாவசியமாக மாறியுள்ளதெனத் தெரிவித்தார்.
புத்தளம் மாவட்டத்தின் கல்வி நடவடிக்கைகளில் நிலவும் பிரச்சினை காரணமாக குருநாகல் மாவட்டத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த மேல்மாகாண கல்வி அமைச்சர் பதவியை தான் இம்முறை புத்தளம் மாவட்டத்திற்கு வழங்கியதாகத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அனைவரும் ஒன்றிணைந்து மாவட்டத்தின் கல்வியை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனத் தெரிவித்தார்.
முழு நாட்டுக்குமாக ஒரே ஒரு நிகழ்ச்சி நிரலே தன்னிடம் உள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், தன்னிடம் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் இல்லை எனவும் 5 ஆண்டுகளின் பின்னர் நான் எங்கு இருக்கப் போகின்றேன் என்பதனைவிட ஓர் உன்னத நாடாக தனது தாய் நாடு இருக்க வேண்டிய இடத்தினையே நான் முக்கியமானதாகக் கருதுகின்றேன்.
புத்தளம் சித்தார்த்த ஆரம்ப பாடசாலையின் பெற்றோர்கள் அப்பாடசாலையின் குறைபாடுகள் உள்ளடங்கிய ஓர் அறிக்கையை ஜனாதிபதி அவர்களிடம் கையளித்தனர்.
அதுபற்றி கவனம் செலுத்திய ஜனாதிபதி அவர்கள் இக்குறைபாடுகளை துரிதமாக பூர்த்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க மற்றும் வடமேல் மாகாண கல்வி அமைச்சர் சந்தியா குமார ராஜபக்ஷ ஆகியோருக்கு ஆலோசனை வழங்கியதுடன், அவற்றை துரிதமாக கண்டறிந்து பூர்த்தி செய்வதாக அவர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பெற்றோர்களிடம் வாக்குறுதியளித்தனர்.
ஜனாதிபதி அவர்களின் வருகையை நினைவுகூர்ந்து நினைவுச்சின்னம் ஒன்றிணை அதிபர் அவர்கள் ஜனாதிபதி அவர்களுக்கு வழங்கி வைத்தார்.
அத்துடன் புத்தளம் தம்போவ மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய தொழில்நுட்ப ஆய்வுகூடத்தினை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று முற்பகல் ஜனாதிபதி அவர்களின் கரங்களினால் மேற்கொள்ளப்பட்டது.
கல்லூரிக்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்கள், மாணவர்களினால் ஆரவாரமாக வரவேற்கப்பட்டதுடன், புதிய தொழில்நுட்ப ஆய்வுகூடத்தினை மாணவர்களிடம் கையளித்த ஜனாதிபதி அவர்கள், அங்கு மேற்பார்வை விஜயத்தை மேற்கொண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள்பற்றி கேட்டறிந்தார்.
2015ஆம் ஆண்டில் உயர்தரப் பரீட்சையில் விசேட திறமைகாட்டி, பல்கலைக்கழக அனுமதி பெற்ற மூன்று மாணவர்களுக்கு ஜனாதிபதி அவர்கள் சின்னங்களை வழங்கிவைத்தார்.
இராஜாங்க அமைச்சர்களான பாலித்த ரங்கே பண்டார, பிரியங்கர ஜயரத்ன ஆகியோர் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
அத்துடன் 150 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புத்தளம் கருவலகஸ்வெவ புதிய நாடக அரங்கினை மக்களிடம் ஒப்படைத்தலும் ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்டது.
வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment