தங்கம் உள்ளதாக தகவல்கள் வெளிவரும் பீகொக் மாளிகையின்
நீச்சல் தடாக மண் அகற்றப்பட்டது
பீகொக்
மாளிகையின் நீச்சல் தடாகத்தில் நிரப்பப்பட்டுள்ள மணல் இன்று பொலிஸார் முன்னிலையில் அகற்றப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளின் மேற்பார்வையில் இத் தடாகத்தில் உள்ள
மணல் அகற்றப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
பீகொக்
மாளிகையின் நீச்சல் தடாகத்தில் முன்னாள் ஜனாதிபதியின் தங்கம் உள்ளதாக தகவல்கள் வெளிவரும்
நிலையிலேயே இந்த மணல் அகற்றப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது
குறித்து பிரபல வர்த்தகரும் தொழிலதிபருமான ஏ.எஸ்.பி. லியனகே பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு
ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இந்த
தடாகத்தில் தங்கம் உள்ளதா என்பது குறித்து எதிர்வரும் முதலாம் திகதிக்கு முன்னர் தமக்கு
அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபர் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்
பூஜித்த ஜயசுந்தரவிற்கு உத்தரவு பிறப்பித்தார்.
இதனை
அடுத்தே இந்த தடாகம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனக் கூறப்படுகின்றது.
0 comments:
Post a Comment