விசேட திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கு

ஜனாதிபதி வாழ்த்து

2015ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பிரிவில் விசேட திறமைகளை வெளிக்காட்டிய மாணவ மாணவிகளுக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

2015 கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் உயிரியல், பௌதீகவியல், வர்த்தகம், கலை, பொறியியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று நாட்டில் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது இடங்களைப் பெற்றுக்கொண்ட மாணவ மாணவிகள்  நேற்று 27 ஆம் திகதி புதங்கிழமை  முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அவர்களை சந்தித்தனர்.
     ====================================================================

2015ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பிரிவில் விசேட திறமைகளை வெளிக்காட்டிய மாணவ மாணவிகளுக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
2015 கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் உயிரியல், பௌதீகவியல், வர்த்தகம், கலை, பொறியியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று நாட்டில் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது இடங்களைப் பெற்றுக்கொண்ட மாணவ மாணவிகள் இன்று (27) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அவர்களை சந்தித்தனர்.
இங்கு மாணவர்களின் திறமைகளைப் பாராட்டிய ஜனாதிபதி, அவர்களின் எதிர்கால கல்வி நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு தமது ஆசீர்வாதங்களையும் தெரிவித்துக்கொண்டார்.
மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி பரீட்சையைப்போன்று வாழ்க்கையிலும் சிறப்பாக சித்திபெற மாணவர்கள் அர்ப்பணத்தோடு செயற்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
மேற்படி மாணவர்களுக்கு விருதுகளையும் ஜனாதிபதி வழங்கி வைத்ததோடு, சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையின் கீழ் மடிக் கணனிகளும் மக்கள் வங்கியின் அனுசரணையின் கீழ் பணப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. மேலும் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கையில் ஆரம்ப முதல் இறுதி வரை இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான புரோட் பேன்ட் வசதிகளை வழங்கவும் ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனம் அனுசரணை வழங்கியிருந்தது.
2015 உயர்தரப் பரீட்சையில் விசேட சித்திகளைப் பெற்ற மாணவர்களுக்கு இலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் 30 புலமைப்பரிசில்களை வழங்க ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனம் முன்வந்தது. மாவட்ட மட்டத்தில் விசேட திறமைகளை வெளிக்காட்டிய 20 பேர்களுக்கும் படை வீரர்களின் பிள்ளைகள் 5 பேருக்கும் வடக்கில் யுத்தத்தில் அங்கவீனமுற்றவர்களின் பிள்ளைகள் 5 பேர்களுக்கும் இந்த புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன், பரீட்சை ஆணையாளர் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

President congratulates GCE A/L top scorers

President Maithripala Sirisena extended his warm congratulations to the students who excelled at the GCE A/L – 2015.
The students who won first, second and third places in biology, physics, commerce, arts, engineering technology, bio system technology and common subject stream of AL – 2015, met the President  (Jan. 27) at the Presidential Secretariat.
The President who appreciated the skills of these students extended his best wishes for their studies in the future. Addressing the students he said they should be dedicated to win the life similar to the way they passed the exam.
President Sirisena presented the gifts to these students at this occasion. The students were presented laptops sponsored by Singer Sri Lanka company while the People’s Bank offered cash gifts. Sri Lanka Telecom offered Rs. 200000 worth broadband packages for each student for their usage from the beginning to the end of their university studies.
The Sri Lanka Telecom is willing to offer 30 scholarships to those who passed the AL – 2015 with high marks, for Sri Lanka Technological University. The Chairman of Sri Lanka Telecom Mr. Kumara Sirisena presented the letter related this to the President at this occasion.
These scholarships will be provided to 20 students who got high marks at district levels, five students from the families of war heroes and five children of those who became disable during the war in the North.

Minister of Education Akila Viraj Kariyawasam, State Minister of Education V. Radakrishnan and the Commissioner General of Examinations also were present at this occasion.








0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top