சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள்
ஜனாதிபதியுடன் இன்று விசேட
சந்திப்பு
ஸ்ரீலங்கா
சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களுக்கும்,
ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேனவிற்கும் இடையில் இன்று விசேட சந்திப்பொன்று
இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்படுகின்றதுது.
இன்று
மாலை 7.00 மணியளவில்
ஜனாதிபதி செயலகத்தில்
இந்த சந்திப்பு
இடம்பெறவுள்ளது.
ஸ்ரீலங்கா
சுதந்திரக் கட்சியின் அமைச்சரவை அமைச்சர்கள், பிரதி
அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் ஆகியோரின்
வருகை இங்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய
அரசியல் அமைப்பு
திருத்தம், ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்
கூட்டத்தின் போது வெளிவிவகார அமைச்சர் மங்களவுடன்
ஏற்பட்ட முரண்பாடு
உள்ளிட்ட பல்வேறு
விடயங்கள் தொடர்பில்
சுதந்திரக் கட்சி அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாகத்
தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை,
ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன பங்கேற்காத
ஆளும் கட்சிக்
கூட்டங்களில் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பங்கேற்பதில்லை
என சுதந்திரக்
கட்சியின் சிரேஸ்ட
அமைச்சர்கள் எடுத்த தீர்மானம் தொடர்பில், ஜனாதிபதிக்கு
இன்றைய சந்திப்பில்
தெளிவுபடுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment