சவூதியில் மது பாட்டில்கள் கடத்திய நபர் கைது
கடுமையான தண்டனைக்கு
வாய்ப்பு
சவுதி அரேபியாவில்
விதிகளை மீறி
மது பாட்டில்களை
கடத்திய நபர்
மீது கடுமையான
தண்டனைக்கு பரிந்துரைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி
அரேபியா நாடு
இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமாதலால் காலம் காலமாக
அங்கு மதுவுக்கு
அரசு தடை
விதித்துள்ளது.
பொதுமக்கள்
மது அருந்தவும்
சவுதி அரேபியாவில்
கடுமையான கட்டுப்பாடுகளை
அமுல்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில்
பஹ்ரைன் பகுதிக்கு
சென்று வந்த
ஒருவர் சட்டவிரோதமாக
14 பாட்டில்கள் மதுவை உள்ளாடையில் வைத்து மறைத்து
எடுத்து வந்துள்ளார்.
இரண்டு
நாடுகளையும் இணைக்கும் 16 மைல் தூர பயணத்தின்
நடுவே நாட்டின்
எல்லையில் அமைந்திருக்கும்
சோதனை சாவடியில்
அந்த நபரை
அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.
இதில்
அவர் தனது
நீண்ட வெள்ளை
அங்கியின் உள்ளே
கால்களில் கட்டி
வைத்து மது
பாட்டில்களை கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து
அந்த நபரை
கைது செய்துள்ள
பொலிசார் அவருக்கு
பொதுமக்கள் முன்னிலையில் கசையடி அல்லது சிறை
தண்டனைக்கு பரிந்துரைத்துள்ளனர்.
இதேப்போன்று
கடந்த நவம்பர்
மாதத்தில் மது
பாட்டில்களை கடத்திய நபரையும் சுங்க அதிகாரிகள்
கைது செய்துள்ளனர்.
கடந்த
அக்டோபர் மாதம்
வீட்டில் தயார்
செய்த மதுவை
வாகனத்தில் வைத்திருந்ததாக கூறி 74 வயதான பிரித்தானியர்
ஒருவரையும் பொலிசார் கைது செய்திருந்தனர்.
0 comments:
Post a Comment