ஆசிரிய ஆலோசகர்கள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு
முன்பாக கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகள் அடங்கிய மகஜர்
கல்விப் பணிப்பாளர் நிசாமிடம் கையளிப்பு
கிழக்கு மாகாணத்தின்
17 வலயங்களைச் சேர்ந்த சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள்
தமது சேவையை
நிரந்தரமாக்கக் கோரி கிழக்கு மாகாண
கல்வி அமைச்சுக்கு
முன்பாக ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர்.
இன்று
காலை திருகோணமலையில்
அமைந்துள்ள ஆளுனர் செயலகத்தின் முன்பாக இருந்து
பேரணியாக சென்ற
குறித்த ஆசிரியர்கள்
கல்வி அமைச்சுக்கு
முன்பாக கோசங்களை
எழுப்பி ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர்.
கடந்த
2013ம் ஆண்டு
உயர் நீதிமன்றத்தில்
வழக்கு தாக்கல்
செய்யப்பட்டு தமது சேவையை நிரந்தரமாக்க வேண்டும்
என தீர்ப்பு
வழங்கப்பட்டிருப்பினும் இதுவரை தமது
சேவை நிரந்தரமாக்கப்படவில்லை
என இங்கு
ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
மேலும்
தமது கோரிக்கைகள்
அடங்கிய மகஜர்
ஒன்றினை மாகாணக்
கல்விப் பணிப்பாளர்
M.T.A நிசாமிடம் கையளித்தனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.