கல்முனை பஸ்தரிப்பு நிலையத்தில்

ஆணின் சடலம் மீட்பு

கல்முனை பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகாமையில் 44 வயது மதிக்கத்தக்க ஆணொருவரின் சடலம் இன்று பிற்பகல் 3.45 மணியளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
கல்லாறு காளி கோயில் வீதியை பிறப்பிடமாகக் கொண்ட தம்பிராசா வரதரதசன் என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இவர் தனியார் பஸ்களில் நடத்துனராகவும். மற்றும் கடைகளிலும் தொழில் புரிந்து வருபவர் எனவும், தொடர்ந்து அதிகளவாக மது அருந்துபவர் எனவும் பஸ் தரிப்பு நிலையத்திலுள்ளவர்கள் கூறியுள்ளனர்.
கல்முனை பஸ் நிலையக் கட்டிடத் தொகுதியின் மேல் மாடியில் இருந்து கீழ்த் தளத்தில் வீழ்ந்திருக்கலாம் எனவும் அதனால் அவரது தலை பலமாக அடிபட்டு உயிரிழந்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சம்பவத்தின்போது அவர் குடிபோதையில் இருந்திருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.
அவரது தலையில் பெரியளவில் அடிபட்ட இரத்தக் காயம் காணப்படுகிறது எனவும் விசாரணைகள் மூலமே மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள முடியும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top