விதையாய் போன ஆசான்
ஓய்வு பெற்ற அதிபர் மர்ஹூம் SMM.பழீல் சேர்
மர்ஹூம்களான செய்யது முஹம்மத், அலிமாநாச்சி ஆகியோருக்கு மகனாக 11-05-1938ல் பிறந்தார்.
சிறுவயது
முதல் மர்ஹூம்
SMM.பழீல் சேர்
அவர்கள் விளையாட்டுத்துறையில்
அதீத ஆர்வமுள்ள
ஒருவராக இருந்தார்.
கல்வி
கற்ற பாடசாலைகள்:
1-5 வரை மருதமுனை அரசினர் முஸ்லீம்
கலவன் பாடசாலையில்
ஆரம்பக் கல்வி.
5ம்
தர புலமைப்
பரீட்சையில் சித்தியடைந்து காத்தான்குடி
மத்திய மஹா
வித்தியாலயத்தில் ஆங்கில மொழியில் கற்றார்.
- 1957-06-04ல் தனது
19வது வயதில்
அநுராதபுரம் நேகம அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தில்
உதவி ஆசிரியராக
இனைந்தார்.
- மர்ஹூம்
SMM.பழீல் சேர்
அஃபலலுவெவ, வாழைச்சேனை, ஏறாவூர், பதுளை, பண்டாரவளை,
சம்மாந்துறை, நிந்தவூர், மூதூர், பாண்டிருப்பு, மருதமுனை
ஆகிய பாடசாலைகளில்
சேவையாற்றியுள்ளதோடு, மருதமுனை அல்-ஹிறா, அல்-மனார், மற்றும்
ஷம்ஸ் இல்ம்
ஆகிய பாடசாலையில்(1963ல்) ஆசிரியராக
கடமை புரிந்து
கடமைகளுக்கு அப்பால் பாரிய சேவை புரிந்துள்ளார்.
- மர்ஹூம்
SMM.பழீல் சேர்
பண்டாரவளை சாஹிரா
வித்தியாலயத்தின் சாரணியத்தின் வளர்ச்சியில் அழியாத முத்திரை
பதித்தவர்.
- 1959ல் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக்
கலாசாலையில் இனைந்துகொண்டு ஆசியர் பயிற்சியை பெற்றுக்
கொண்டதோடு மட்டுமல்லாது
இஸ்லாம், நாகரீகம்,
ஆக்கவேலை மற்றும்
உடற்கல்வி ஆகிய
பாடங்களில் சிறப்புத்தேர்ச்சியும் பெற்றுக்
கொண்டார்.
- ஆசிரியர்
கலாசாலையில் நடைபெற்ற 100மீற்றர், 200மீற்றர், உயரம்
பாய்தல், உதைபந்தாட்டம்,
கரைப்பந்தாட்டம் என பல்வேறு பட்ட போட்டிகளிலும்
மகத்தான சாதனை
படைத்தார்.
- 1957ல் சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் முதலுதவிப்
படையில் பணியாற்றினார்.
- 1969ல் பலாலி ஆசிரிய கலாசாலைக்கு
ஆங்கில விஷேட
ஆசிரியர் பயிற்ச்சிக்காக
தெரிவு செய்யப்பட்டார்.
- 1974 ஜனவரி 13ம் திகதி உதைபந்தாட்ட
மத்தியஸ்தர் சங்கத்தில் மத்தியஸ்தராக நியமணம் பெற்றுக்
கொண்டதோடு, 1985ல் முதலாம் தர மத்தியஸ்தராக
பதவி உயர்வடைந்தார்.
- மர்ஹூம்
SMM.பழீல் சேர்அவர்கள்
பல உள்ளூர்,
தேசிய போட்டிகளுக்கும்
மற்றும் வெளிநாட்டு
அணிகள் பங்குபற்றிய
உதைபந்தாட்டப் போட்டிகளுக்கும் மத்தியஸ்தம்
வகித்து மருதமுனைக்கு
புகழ் சேர்ந்தவராவார்.
- மர்ஹூம்
SMM.பழீல் சேர்
அவர்கள் விளையாட்டுத்துறைக்கு
ஆற்றிய மிகக்
கடினமான சேவைகள்
காரணமாக அவர்களை
"மருதமுனை விளையாட்டின் தந்தை" என சிறப்புப்
பெயர் கொண்டு
அழைக்கப்பட்டார்.
- சாரணியத்தில்
வளங்கப்படுகின்ற அதி உயர் விருதான "தடு
சின்னத்தை"(Wood Badge) 1965ல் கிழக்கு
மாகாணத்திலேயே முதலாவது பெற்றுக் கொண்டவராக மர்ஹூம்
SMM.பழீல் சேர்
அவர்கள் இருந்தமை
இன்னுமொரு சிறப்பம்சமாகும்.
- 1976ல் மூதூர் மத்திய மஹா
வித்தியாலயத்துக்கு அதிபராக நியமிக்கப்பட்டார்.
இக்காலத்தில் மூதூர் கிராமமானது கல்விலும், உதைப்பந்தாட்டத்திலும்
துரித வளர்ச்சி
அடைந்தமை விசேட
அம்சமாகும்.
- மர்ஹூம்
SMM.பழீல் சேர்
அவர்கள் 1978ல் மாவட்ட உதவி சாரண
ஆனையாளராக இலங்கை
சாரணிய சங்கத்தால்
நியமிக்கப்பட்டார்.
- மருதமுனையின்
பழம்பெரும் கழகமான ஈஸ்ட்லங்கா விளையாட்டுக் கழகத்தை
தோற்றுவிப்பதில் முன்னோடியாக இருந்தார்.
- மருதமுனையில்
கழகங்களுடாக சமூக சேவை செய்தல் என்ற
சிந்தனையை செயல்வடிவம்
கொடுத்தவராக மர்ஹூம் SMM.பழீல் சேர் அவர்கள்
காணப்பட்டார்.
- 1996 ஜூன் மாதம் அதிபர் சேவையில்
தரம் 1 க்கு
பதவி உயர்வு
பெற்றார்கள்.
- 1996 டிசம்பர் 16ல் அதிபர், ஆசிரியர்
சேவைகளிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டார்.
- 1999ல் அரச அங்கிகாரம் பெற்ற
ஆங்கில மொழி
பெயர்ப்பாளராக நியமிக்கப்பட்டார்.
- ஆங்கிலத்தில்
சிறந்த புலமையுள்ள
மர்ஹூம் SMM.பழீல் சேர் அவர்கள் குறிப்பாக
மருதமுனையின் ஆங்கிலக் கல்வி வளர்ச்சியில் அதிக
பங்காற்றியதோடு, கடிதங்கள், மற்றும் ஆவணங்களை மொழிபெயர்த்து
அவற்றை தட்டச்சு
செய்து பலருக்கு
அமைச்சுக்கள் வரைக்கும் உதவிபுரிந்துள்ளார்.
- மருதமுனை
ஆங்கில பரீட்சை
அடைவு மட்டத்தை
உயர்துவதற்காக இரவு, பகல் என்று பாராமல்
அரும் பாடுபட்டார்
- மாணவர்களுடைய
அறிவு, ஒழுக்கம்,
விளையாட்டு மற்றும் ஆன்மீகத் துறைகளில் பல
பங்களிப்புக்களை வழங்கினார்.
- பல
வறிய மாணவர்களுக்கு
இரவு பகலாக
இலவசமாக பாடம்
புகட்டியமை இன்றும் யாராலும் மறக்க முடியாதமை.
- ஊரினுடைய
உயர்தர, மற்றும்
சாதாரன தர
மாணவர்களுடைய ஆங்கில அடைவுமட்டத்தினை அதிகரிப்பதற்காக அரும்
பாடுபட்டவர்.
- இடர்படும்
மாணவர்களுக்கும், மற்றும் பிற மணிதர்களுக்கும் தம்மால்
இயன்ற பண,
உடல்ரீதியான உதவிகளை மிக ரகசியமாக செய்து
வந்தவர்.
மர்ஹூம்
SMM.பழீல் சேர்
அவர்கள் புன்னகையான,
நகச்சுவையுள்ள ஒரு மணிதராகவும், கஷ்டத்தின் போது
உதவி செய்பவராகவும்,
அதேநேரம் குழந்தைகளிடம்
அன்பாகவும், பாமர்களோடும், படித்தவர்களோடும்
எளிமையாக பழகுகின்றவராக
இருந்தார்.
- வீடு
தேடி உதவி
செய்யக்கூடிய பண்புள்ளவராகவும், தனது கும்பத்தினரால் மிகவும்
நேசிக்கப்பட்ட ஒரு மணிதராகவும் மர்ஹூம் SMM.பழீல்
சேர் அவர்கள்
இருந்தார்.
- ஆங்கிலப்
பாடத்தை முறையாக,
தனக்கேயுரிய தனித்துவமான முறையில் கற்றுக் கொடுத்ததோடு,
அல்-மனார்
மத்திய கல்லூரியின்
வளர்ச்சிக்கும் அரும் பாடுபட்ட ஒருவராவார்.
- மர்ஹூம்
SMM.பழீல் சேர்
அவர்கள் தனது
63வது வயதில்
2002ல் வபாத்தானார்.
இன்னாலில்லாஹி
வ இன்னா
இலைஹி றாஜிஊன்......
அல்லாஹ்
அன்னாருடைய சேவைகளை "ஸதகத்துல் ஜாரியாவாக"
ஏற்றுக்
கொண்டு, அவர்களுடைய
கப்ரை விசாலமாக்கி,
மறுமையில் "ஜன்னத்துல் பிர்தௌஸ்" எனும் உயர்ந்த
சுவனத்தைக் கொடுப்பானாக!!!
ஆமீன்
0 comments:
Post a Comment