ஏமனில் ஜனாதிபதி மாளிகை அருகே தற்கொலை தாக்குதல்
7 பேர் பலி 15 பேர் காயம்
ஏமனில்
ஜனாதிபதி மாளிகை அருகே தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைதாக்குதலில் 7பேர் பலியாகினர்
என அறிவிக்கப்படுகின்றது.
ஏமனில்
ஜனாதிபதி அப்ட்ரா டிக் மன்சூர் ஹாதிக்கு எதிராக ஹவுதி கிளர்ச்சிக்காரர்கள் தாக்குதல்
நடத்தி தலைநகர் சனாவை கைப்பற்றினர். எனவே, கடந்த ஜூலை முதல் ஹாதி துறைமுக நகரமான எடனை
தனது தலைநகராக மாற்றினார்.
அங்கு
தனது அமைச்சரவை, இராணுவத்துடன் அரசு நடத்தி வருகிறார். இவருக்கு பின்னணியில் சவூதி
அரேபியா ஆதரவு அளித்துள்ளது. அதே நேரத்தில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் பக்கபலமாக
உள்ளது.
அரசின்
ஸ்திரமற்ற நிலையை பயன்படுத்தி ஏமனில் ஐ.எஸ். தீவிரவாதிகளும், அல்கொய்தா தீவிரவாதிகளும்
தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்று ஜனாதிபதி ஹாதியின் ஏடன் மாளிகை அருகே கார் குண்டு
தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது.
ஜனாதிபதி
மாளிகைக்கு முன்பு சுமார் 1 கி.மீட்டர் தொலைவில் சோதனை சாவடி உள்ளது. அங்கு காரில்
வேகமாக வந்த தீவிரவாதி அதன் மீது மோதி குண்டுகளை வெடிக்கச் செய்தான்.
இத்தாக்குதலில்
7பேர் பலியாகினர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இராணுவ வீரர்கள் மற்றும் 2 குழந்தைகள்,
பொது மக்கள் அடங்குவர், மேலும் 15 பேர் காயம் அடைந்தனர்.
இத்தாக்குதலுக்கு
ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். கார் குண்டு தற்கொலை தாக்குதல் நடந்த போது
ஜனாதிபதி மன்சூர் ஹாதி மாளிகையில் தான் இருந்தார். ஆனால் அவருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment