பாசிகளால் டிமென்ஷியா நோய் ஆபத்து!
பிரிட்டிஷ் விஞ்ஞானிகள்
எச்சரிக்கை!!
நீர்நிலை பாசிகளால் டிமென்ஷியா எனும் நினைவிழப்பு நோய் ஏற்படுகிறது என்று பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பிரிட்டனின் 8 மோசமான நோய்களில் டிமென்ஷியாவும் ஒன்றாகும். இன்னும் 4 ஆண்டுகளில் 4-வது இடத்துக்கும் அடுத்த 10 ஆண்டுகளில் முதலிடத்தையும் டிமென்ஷியா எட்டி பிடித்துவிடும் என்று அந்த நாட்டு மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ஞாபகத் திறன், செயல் திறன் படிப்படியாக குறைந்து ஒரு கட்டத்தில் உடல் உணர்வற்று போகும். பொதுவாக முதுமை, மரபணு ஆகியவற்றின் காரண மாகவே டிமென்ஷியா பாதிப்பு ஏற்படுகிறது. இவை தவிர நீர்நிலை, கடலில் வளரும் பாசிகளாலும் இந்நோய் பாதிப்பு ஏற்படுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஏரிகள், கடலில் காணப்படும் நீல-பச்சை நிற பாசிகளில் பீட்டா-என்-மீத்தேல்மினோ-எல்-அலைனி (பி.எம்.ஏ.ஏ.) எனும் அமிலம் உள்ளது. இது மனிதனின் மூளையைப் பாதிக்கும் நச்சு அமிலம் ஆகும்.
நீல-பச்சை நிற பாசிகளை உண்டு வாழும் மீன்களில் பி.எம்.ஏ.ஏ. அமிலம் நிறைந்து காணப்படுகிறது. அத்தகைய மீன் உணவுகளைச் சாப்பிடுபவர்கள் டிமென்ஷியாவில் பாதிக்கப்படுகின்றனர். மேலும் பாசிகள் தேங்கிய நீர்நிலைகளின் தண்ணீரை குடிப்பவர்களுக்கும் டிமென்ஷியா ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
பிரிட்டனின் சில பகுதிகளில் நீல-பச்சை பாசிகள் உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது. அந்த உணவுகளை உட்கொள்கிறவர்களுக்கு டிமென்ஷியா ஆபத்து மிக அதிகமாக உள்ளது.
பிரிட்டனின் பல்வேறு பகுதி நீர்நிலைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட பாசிகளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளனர். மேலும் பி.எம்.எம்.ஏ. அமிலம் நிறைந்த உணவுகள் அண்மையில் குரங்குகளுக்கு அளிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. ஐந்தே மாதங்களில் அந்த குரங்குகளின் மூளை, நரம்பு மண்டலம் கடுமை யாகப் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment