“விளையாட்டு மற்றும்
தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய வாரம்”
உடற்பயிற்சியில் ஈடுபட்ட ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள்
இன்று 25 ஆம் திகதியிலிருந்து 30 ஆம் திகதி வரை “விளையாட்டு
மற்றும் தேகாரோக்கிய
மேம்பாட்டு தேசிய வாரம்” எனவும் ஜனவரி
30 ஆம் திகதி
சனிக்கிழமை விளையாட்டு மற்றும் தேகாரோக்கிய மேம்பாட்டு
தேசிய தினம்
எனவும் அரசாங்கத்தால்
பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இன்று 25 ஆம் திகதி திங்கள்கிழமை
ஜனாதிபதி மாளிகைக்கு முன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, விளையாட்டு அமைச்சர் தயாசிறி ஜயசேகர
- விளையாட்டு பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோர் உடற்பயிற்சியில்
ஈடுபட்டனர்
இலங்கையில்
அதி வேகமாகப்
பரவுகின்ற தொற்றா
நோய்களை கட்டுப்படுத்துவது
தொடர்பாக இத்
தேசிய நிகழ்ச்சித்
திட்டத்தின் மூலம் சிறப்பான ஆரம்பம் ஒன்றை
வழங்குவதே இதன்
நோக்கமாகும்
2016 ஜனவரி 25 ஆம் திகதி “அரசாங்க
மற்றும் அரசாங்க
சேவை – விளையாட்டு
மற்றும் தேகாரோக்கிய
மேம்பாட்டு தேசிய வாரம்”எனப் பெரிடப்பட்டுள்ளது.
சுகதேசிகளான அரச அலுவலகர்களினூடாக வினைத்திறனும், வினைத்திறன்
வாய்ந்த அரசாங்க
சேவை ஒன்றை
வழங்குவதை நோக்காகக்
கொண்டு சகல
அரசாங்க நிறுவனங்களிலும்
தேகாரோக்கிய நிகழ்ச்சித் திட்டங்களை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.