பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட மற்றும் குடியமர்வு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட

80,000 அகதிகளை உடனடியாக நாடுகடத்த சுவீடன் அரசு முடிவு!


சுவீடன் நாட்டில் 2015ம் ஆண்டில் குடியேறிய அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களில் சுமார் 80,000 நபர்களை உடனடியாக அவர்களது தாய்நாடுகளுக்கு திருப்பி அனுப்ப அரசு முடிவு செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுமார் 9.8 மில்லியன் மக்கள் தொகை கொண்ட சுவீடன் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக அதிக எண்ணிக்கையில் அகதிகளை அனுமதித்து வருகிறது.
கடந்த 2015ம் ஆண்டில் மட்டும் சுமார் 1,60,000 அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் சுவீடன் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
சுவீடனில் அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது போல், குற்றங்களில் ஈடுபடும் அகதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது அந்நாட்டு அரசை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
குறிப்பாக, Molndal என்ற நகரில் உள்ள அகதிகள் முகாமில் 22 வயதான Alexandra Mezher என்ற இளம்பெண் அகதிகளுக்காக சேவை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த திங்கள் கிழமை அன்று அந்த இளம்பெண் அகதிகள் முகாமில் இரவு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அப்போது, அந்த முகாமில் தங்கியிருந்த 15 வயதான சிறுவன் ஒருவன் அந்த இளம்பெண்ணை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளான். ஆனால், எதற்காக இந்த கொலை நிகழ்ந்தது என்ற காரணம் இதுவரை தெரியவரவில்லை.
இதேபோல், சில தினங்களுக்கு முன்னர் Vasteras பகுதியில் அகதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த 10 பொலிசார் மீது அகதிகள் சூழ்ந்துக்கொண்டு தாக்க தொடங்கியுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு பிறகு, பொலிசாருக்கு பாதுகாப்பு இல்லாததால், காவல் துறைக்கு புதிதாக 4,100 பொலிசாரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அரசிற்கு வைக்கப்பட்டுள்ளது.
இதுபோல், சுவீடனில் புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகள் அதிக அளவில் குற்ற நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருவதால், தற்போது அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது.
இது குறித்து பேசிய சுவீடன் உள்துறை அமைச்சரான Anders Ygeman, ‘பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட மற்றும் குடியமர்வு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட சுமார் 80,000க்கும் அதிகமான வெளிநாட்டினர்களை உடனடியாக அவர்களது தாய்நாடுகளுக்கு திருப்ப அனுப்ப முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top