மறைந்த
எம்.கே.டி.எஸ். குணவர்த்தனவின் இடத்திற்கு
சரத் பொன்சேகா
நியமனம்?
ஐக்கிய
தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும்
ஒன்பதாம் திகதி நாடாளுமன்றம் கூடும் போது சரத் பொன்சேகா பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள்
அமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்த்தனவின் மறைவு காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்துக்கு சரத்
பொன்சேகாவை நியமிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
இலங்கையின்
முதலாவது இராணுவ பீல்ட் மார்சலான சரத் பொன்சேகா, 2010ம் ஆண்டு முதன் முதலாக ஜனாதிபதித்
தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.
அதன்
பின்னர் அதே ஆண்டில் நாடாளுமன்றத்துக்குத் தெரிவான அவர் அவருக்கு விதிக்கப்பட்ட இரண்டு
வருட சிறைத்தண்டனை காரணமாக பதவியை இழந்தார்.
கடந்த
பொதுத் தேர்தலிலும் அவரது கட்சி தனித்துப் போட்டியிட்ட போதிலும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியைக் கூட பெறமுடியாத நிலையில் பின்தள்ளப்பட்டிருந்தது.
இந்நிலையில்
தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள
சரத் பொன்சேகா, எதிர்வரும் 09ம் திகதி சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னிலையில் நாடாளுமன்ற
உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment