மத அனுட்டான நிகழ்வில்
ஜனாதிபதி
மைத்திரி – மஹிந்த எம்.பி திடீர் சந்திப்பு
ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன இன்று வெள்ளிக்கிழமை மாலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை
திடீரென சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோட்டே
ஸ்ரீ சாமகிறி தர்ம மகா சங்க சபையினால் கோட்டே ரஜமகா விகாரையில் ஏற்பாடு செய்த நிகழ்வொன்றிலேயே
இவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த
மத அனுட்டான நிகழ்வில் இருவரும் பூஜையின் முக்கிய நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்துள்ளதும்
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment