தெற்காசிய
விளையாட்டுப் போட்டிகளில்
இலங்கைக்கு
நான்கு தங்கப் பதக்கங்கள்
தெற்காசிய
விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை நேற்று வரை நான்கு தங்கப் பதக்கங்களை சுவீகரித்தது.
200
மீற்றர் Freestyle நீச்சல் ஆடவர் பிரிவில் முதல் தங்கப் பதக்கத்தை மெத்யூ அபேயசிங்க
சுவீகரித்தார்.
இதனையடுத்து,
நீச்சல் போட்டியில் Butterfly 100 மீற்றர் ஆடவர் பிரிவில் மெத்யூ அபேசிங்க மேலும் ஒரு
தங்கப் பதக்கத்தை வெற்றிகொண்டார்
மூன்றாவது
தங்கப்பதக்கமும் மெத்யூ அபேசிங்க தலைமை வகித்த நீச்சல் குழுவிற்கே கிடைத்தது.
பளு
தூக்கல் போட்டியில் 62 கிலோகிராம் ஆடவர் பிரிவில் சுதோஸ் பீரிஸ் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
இதேவேளை,
நீச்சல் போட்டியில் 200 மீற்றர் Freestyle மகளிர் பிரிவில் மசிக்கோ ரஹீம் வௌ்ளிப் பதக்கத்தை
சுவீகரித்தார்.
இந்த
பிரிவின் வெண்கலப் பதக்கமும் இலங்கைக்கே கிடைத்தது.
100
மீற்றர் Butterfly மகளிர் பிரிவில் ஹிருணி பெரேரா வௌ்ளிப் பதக்கத்தை தனதாக்கினார்.
இந்தப்
போட்டியில் மசிக்கோ ரஹீம் வெண்கலப் பதக்கத்தை வெற்றி கொண்டார்.
48
கிலோகிராம் பளுதூக்கல் போட்டியில் தினுஷா கங்சனி வௌ்ளிப்பதக்கத்தை வெற்றி கொண்டார்.
சைக்கிளோட்டப்
போட்டியில் கலந்துகொண்ட ஜனக்க ஹேமந்தவிற்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
56
கிலோகிராம் பளு தூக்கல் போட்டியில் சதுரங்க லக்மால் ஸ்நெச் முறையில் தெற்காசிய சாதனையை
நிலைநாட்டி வௌ்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
இலங்கையின்
சாமரி வர்ணகுலசூரிய பளுதூக்கல் 53 கிலோகிராம் எடைப் பிரிவில் மகளிருக்கான போட்டியில்
வௌ்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார்.
தெற்காசிய
விளையாட்டுப் போட்டிகளின் நேற்றைய போட்டிகள் நிறைவில், இலங்கைக்கு 4 தங்கப் பதக்கங்களும்.
10 வௌ்ளிப் பதக்கங்களும் 8 வெண்கலப் பதக்கங்களும் கிடைத்துள்ளன.
0 comments:
Post a Comment