தேசிய சுதந்திர தின விழாவில் 

தமிழ் மொழியிலும் தேசியக் கீதம்.

தமிழ் மொழி பேசும் மக்கள் மகிழ்ச்சி



காலி முகத்திடலில் இன்று காலை இடம்பெற்ற இலங்கையின் 68 வது சுதந்திர நாள் நிகழ்வுகளின் இறுதியில் தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காலையில், இலங்கையின் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். அதையடுத்து சிங்களத்தில் தேசிய கீதம் வழக்கம் போலப் பாடப்பட்டது.
அதையடுத்து, ஜனாதிபதியின் உரை, முப்படைகளினதும் இராணுவ அணிவகுப்புகள் இடம்பெற்றன.
இந்த நிகழ்வுகளின் முடிவில், காலை 11.15 மணியளவில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது. அத்துடன் காலை நிகழ்வுகள் நிறைவடைந்தன.
இலங்கையின் வரலாற்றில் 1949 ஆம் ஆண்டிற்குப் பின்னர், இவ்வாண்டு இடம்பெற்ற 68 வது சுதந்திர நாள் நிகழ்வில், தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது.
அத்துடன்,  ஜனாதிபதியின் உரை முடிந்த பின்னர், விழா அரங்கில், அதன் தமிழ் மொழி பெயர்ப்பும், வாசிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


                   தமிழ் மொழி பேசும் மக்கள் மகிழ்ச்சி

                            நல்லாட்சியினருக்கு சபாஷ் 

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top