வடக்கின்
புதிய ஆளுநராக ரெஜினோல்ட் குரே?
!
வடக்கு
மாகாணத்துக்குரிய புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே, ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேனவினால் நியமிக்கப்படவுள்ளார் எனத் தெரிய வருகின்றது.
தனக்கு
இவ்வாறானதொரு பதவி கிடைக்கவுள்ளது என அறியக் கிடைத்தது என்று ரெஜினோல்ட் குரே உறுதிப்படுத்தியுள்ளார்
என்றும் கூறப்படுகின்றது.
தற்போதைய
வடக்கு மாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பளிகக்கார இந்த மாத இறுதியுடன் தனது பதவியிலிருந்து
ஓய்வுபெறுகின்றார். ஆளுநர் பதவியில் இருந்து விலகிக்கொள்வது குறித்து அவர் ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேனவுக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.
இவரின்
இடத்துக்கே ரெஜினோல்ட் குரே நியமிக்கப்படவுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
புதிய
ஆளுநராக நியமிக்கப்படவுள்ள ரெஜினோல்ட் குரே மேல் மாகாண சபையின் முதலமைச்சராக பதவி வகித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுள் ஒருவரான இவர் கடந்த பொதுத்
தேர்தலில் போட்டியிடவில்லை.
0 comments:
Post a Comment