பெல்ஜியம் விமான நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு
13 பேர் பலி, 35 பேர் படுகாயம்
பெல்ஜியம்
தலைநகரான பிரஸ்சல்ஸில்
உள்ள விமான
நிலையத்தில் நிகழ்ந்த பயங்கர வெடிவிபத்தில் 13 பேர் பலியாகியுள்ளதாகவும் 35 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும்
அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரஸ்சல்ஸில்
உள்ள Zaventem என்ற விமான நிலையத்தில் சற்று
முன்னர் இரண்டுக்கும்
மேற்பட்ட வெடிகுண்டுகள்
வெடிக்கும் பலத்த ஓசை எழுந்ததை தொடர்ந்து
விமான நிலையம்
முழுவதும் புகை
மண்டலமாக காட்சியளித்துள்ளது.
இந்த
பயங்கர வெடிவிபத்தில்
13 பேர் பலியாகியுள்ளதாகவும் 35 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும்
அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதிகாரிகள்
உடனடியாக விமான
நிலையத்தை மூடியதுடன்,
அங்கிருந்த பயணிகளை அவசரமாக வெளியேற்றியுள்ளனர்.
மேலும்,
இந்த விமான
நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் Antwerp விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
அதேசமயம்,
சில விமானங்கள்
தரையிறங்கவும் முடியாமல், மற்ற விமான நிலையத்திற்கு
திருப்பி அனுப்பவும்
முடியாமல் Liege நகருக்கு மேல் இன்னும் வட்டமடித்து
வருவதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன.
சில
நிமிடங்களுக்கு முன்னர் வெளியான தகவலில் இந்த
விமான நிலையத்தில்
உள்ள அமெரிக்க
விமான நிறுவன
உதவி மையத்திற்கு
அருகில் இந்த
வெடிவிபத்துக்கள் நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த
வெள்ளிக்கிழமை அன்று பாரீஸ் தாக்குதலில் தொடர்புடைய
முக்கிய தீவிரவாதி
பிரஸ்சல்ஸ் நகரில் கைது செய்யப்பட்ட நிலையில்,
இதே நகரில்
உள்ள விமான
நிலையத்தில் வெடிகுண்டுகள் வெடித்துள்ளது
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமான
நிலையத்தில் அதிகாரிகள் சோதனை செய்ததில் வெடிக்காமல்
இருந்த பல
வெடிகுண்டுகளை கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.
தற்போது
வெளியாகியுள்ள தகவலின் படி, இது தீவிரவாத
தாக்குதல் தான்
என அதிகாரிகள்
உறுதிபடுத்தியுள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.