ஆட்டோ"விபத்து.!
நிந்தவூரில் சம்பவம்
முஹம்மட் ஜெலீல்
நிந்தவூர்-4ம், பிரிவு
"அறபா பாடசாலைக்கு முன்பாக சற்றுமுன் ஏற்பட்ட
ஆட்டோ" விபத்தொன்றில் ஆட்டோ ஓட்டுனர் மயக்கமுற்று
கிடந்த நிலையில்
அவ்வீதியால் சென்றுகொண்டிருந்த பொதுமக்கள்
அவரை அவசர
அவசரமாக நிந்தவூர்
ஆதார வைத்தியசாலைக்கு
எடுத்துச்சென்று சிகிச்சை பிரிவில் ஒப்படைத்தனர்.
குறித்த
ஆட்டோ பாடசாலைக்குச்
செல்லும் குழந்தைகளை
ஏற்றிச் சென்ற
வேளையிலோயே இவ்விபத்து இடம்பெற்றபோதும்
குழந்தைகளுக்கு எதுவித ஆபத்தும் ஏற்படவில்லையென்று அறிவிக்கப்படுகின்றது.
மேலும்
அவ்விடத்தில் ஆட்டோ விபத்தை நேரில் கண்டவர்
கூறுகையில் ஆட்டோ வேறு எந்தவெரு வாகனத்திலும்
மோதவில்லை ஓடிவந்த
ஆட்டோ நேராக
சுவர் வேலியை
ஒடைத்துக்கொண்டு செல்வதை காணமுடிந்ததென கூறினர்
இன்னும்
சிலர் கூறுகையில்
ஆட்டோ ஓட்டுனர்
"பிரசர்,சீனி.போன்ற நேயினால் பாதிக்கப்பட்டிருந்தவராவார்
இவர் ஆட்டோ"
ஓடிவந்த நிலையில்
இவருக்கு தலை
சுற்று ஏற்பட்ட
நிலையிலேயே கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோவை சவரில்
முட்டியிருக்கலாமென கூறினார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.