தோல்வியடைந்தவர்களை அமைச்சரவையில் வைத்து கொண்டு
சிறப்புரிமைகளை வழங்குவதை மக்கள் அங்கீகரிக்க மாட்டார்கள்
சோமவன்ஸ அமரசிங்க
தோல்வியடைந்த 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எமது நாடாளுமன்றத்தில்
உள்ளனர். தோல்வியடைந்தவர்களை அமைச்சரவையில் வைத்து கொண்டு சிறப்புரிமைகளை வழங்குவதை
மக்கள் அங்கீகரிக்க மாட்டார்கள் என மக்கள் சேவை கட்சியின் தலைவர் சோமவன்ஸ
அமரசிங்க தெரிவித்துள்ளார்..
கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் மக்கள் போராட்டம் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மைத்திரிபால - ரணில் அரசாங்கத்தின் ஜனநாயகத்தை மக்கள் சிறந்த முறையில் பரீட்சித்து பார்த்துள்ளனர்.
வேறு எந்த நாட்டிலும் இல்லாத நாடாளுமன்றம் எமது நாட்டில் உள்ளது. தோல்வியடைந்த 14
நாடாளுமன்ற உறுப்பினர்கள் எமது நாடாளுமன்றத்தில் உள்ளனர்.
இதன் மூலம் மைத்திரி - ரணி் தமது ஜனநாயகத்தை வெளிக்காட்டியுள்ளனர். அரசியலில் தூய்மையில்லாத அரசாங்கத்தினால் எந்த பயனுமில்லை.
தோல்வியடைந்தவர்களை அமைச்சரவையில் வைத்து கொண்டு சிறப்புரிமைகளை வழங்குவதை மக்கள் அங்கீகரிக்க மாட்டார்கள்.
மக்களை கால்வாயில் தூக்கி போட்டவர்கள் அமைச்சரவையில் உள்ளனர் என்றால், இங்கு இருக்கும் ஜனநாயகம் என்ன?.
நாட்டை பிரிக்கவும் விற்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புத்தகத்தில் ஒற்றையாட்சி நாடு பற்றி குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் உண்மையில் நாட்டை பிரிக்கும் பிரிவினைவாத வேலைத்திட்டமே உள்ளது.
2020ம் ஆண்டு வரை அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என ரணில் விக்ரமசிங்க கூறுகிறார். அரசாங்கம் மக்கள் ஆட்சியில் அமர்த்தினால், மக்களால், அரசாங்கத்தை கவிழ்க்க முடியும்.
நெருங்கி வரும் ஆபத்து எமக்கு தெரிகிறது. நாட்டை ஒரு நோக்கமின்றி செல்ல இடமளிக்கக் கூடாது. மக்கள் போராட்டத்தை நாடு முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் சோமவன்ஸ அமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment