ஆயிரம் யுவதிகள் தையல்
பயிற்சி நெறியில்
இணைத்துக் கொள்ளப்படவுள்ளள்னர்
இறுதியில் இலவசமாகதையல்
இயந்திரங்களை
வழங்குவதற்கும் ஏற்பாடு
Azam Abdul Azeez
ஆயிரம் யுவதிகள் தையல் பயிற்சி நெறியில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதுடன்
பயிற்சியின் இறுதியில் அவர்களுக்கு இலவசமாக தையல் இயந்திரங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளும்
மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் 500 பேருக்கு சுயதொழில்களுக்கான உபகரணங்கள் மற்றும்
உதவித் திட்டங்கள் வழங்கப்படவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்
பிரதித் தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள்
குழுத் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் இளைஞர், யுவதிகள் மற்றும் வசதி குறைந்த குடும்பத்தினருக்கு சுயதொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் விரைவில் பல்வேறு திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கட்சித் தலைவரும் கைத்தொழில், வணிக அமைச்சருமான ரிஷாத் பதியுதீனின் அனுசரணையுடன் இத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
மாவடிப்பள்ளியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அங்கத்துவ வாரத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment