டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில்
21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி
பாகிஸ்தான் போட்டியை விட்டு வெளியேறியது
20 ஓவர்
உலகக் கிண்ண கிரிக்கெட்
போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்த பாகிஸ்தான்
போட்டியை விட்டு
வெளியேறியது.
போட்டியில்
டாஸ் வென்ற
ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்து. ஆஸ்திரேலியா
20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 193 ஓட்டங்கள் எடுத்து
பாகிஸ்தானுக்கு 194 ஓட்டங்கள் வெற்றி
இலக்காக நிர்ணயம்
செய்தது.
ஆஸ்திரேலியா
அணியில் கவாஜா
21 ஓட்டங்களிலும், பிஞ்ச் 15 ஓட்டங்களிலும், வார்னர்
9 ஓட்டங்களிலும், மேக்ஸ்வெல் 30 ஓட்டங்களிலும்
அவுட் ஆனார்கள்.
கேப்டன் ஸ்டீவன்
சுமித் அதிரடி
ஆட்டம் மூலம்
43 பந்துகளில் 61 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல்
களத்தில் இருந்தார்.
வாட்சனும் 13 ஓட்டங்களில் களத்தில் இருந்தார். பாகிஸ்தான் அணியில்
ரியாஸ், இமாத்
வாசிம் தலா
2 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதையடுத்து
களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 172
ஓட்டங்கள் மட்டும் எடுத்து தோல்வி
அடைந்தது. இந்த
போட்டியில் 5 விக்கெட் வீழ்த்திய ஆஸ்திரேலிய வீரர்
ஜேம்ஸ் பால்க்னர்
ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
0 comments:
Post a Comment