குழந்தையை குளிப்பாட்டும்  முறை



1. குளிக்கவைப்பவர், தரையில் இரண்டு கால்களையும் நன்கு நீட்டி உட்கார வேண்டும்.
2. கணுக்கால் அருகில் கால்களின் இடைவெளியில் குழந்தையின் முகம் இருக்குமாறு குப்புறப் படுக்கவைக்க வேண்டும்.
3. குழந்தையின் தலையின் பின்பகுதி, கழுத்து, முதுகு, புட்டம் ஆகியவற்றில் நீர் ஊற்றி, சோப் போட்டு சுத்தம் செய்து குளிக்கவைக்கவும்.
4. குழந்தையை திருப்பி, முகம் மற்றும் கழுத்துப் பகுதியை சுத்தம் செய்யவும்.
5. காதுக்குள் நீர் புகாமல், காதுகளின் பின்புறம், கழுத்து மடிப்பு, அக்குள், கைகளை சுத்தம் செய்யவும்.
6. இறுதியாக, குழந்தையின் இடுப்பு, பிறப்பு உறுப்பு பகுதி மற்றும் கால்களை சுத்தம் செய்யவும்.
7. பிறப்பு உறுப்பு பகுதியை சுத்தம் செய்யும்போது, முக்கியமாக பெண் குழந்தைக்கு முன்புறத்திலிருந்து பின்புறமாகச் செல்ல வேண்டும்.
8. குழந்தையை மிருதுவான காட்டன் துண்டினால் துடைத்து உடனே உடைகளை அணிவிக்கலாம்.
ரொம்ப முக்கியமாக, வேகமாக அழுத்தித் துடைப்பதை அல்லது தேய்ப்பதைத் தவிர்க்கவும். காரத்தன்மை கொண்ட சோப் வகைகளை தவிர்க்கவும்.




1 comments:

  1. இப்படி தான்! குளிப்பாட்ட வேண்டும் ஏதேனும் தமிழர் பண்பாட்டு மக்கட்பேறு சார்ந்த நூல்களில் ஏதேனும் விளக்கம் உள்ளதா? நீங்கள் மேல் குறிப்பிட்ட அனைத்திற்கும் அர்த்தம் உள்ளதா? கொஞ்சம் விளக்கவும்.

    ReplyDelete

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top