குழந்தைக்கு பல் துலக்க சொல்லிக் கொடுப்பது
தாய்மார்களின் கடமையாகும்.
குழந்தைகளின் பற்களை சுத்தமாக வைத்திருப்பது தாய்மார்களின் கடமையாகும். பற்கள் முளைக்க ஆரம்பித்த பின்னர் தாய் தனது விரல்களால் நன்கு தேய்த்த வாயை சுத்தப்படுத்த வேண்டும்.
ஓராண்டுகள் ஆகும் நிலையில் குழந்தைகளுக்கான பிரஷ் கொண்டு பற்களை லேசாக தேய்த்து விடலாம். அவ்வப்போது அவர்களாகவே பல் துலக்க பழக்கப்படுத்த வேண்டும். பேஸ்டை சாப்பிடாமல் பல் துலக்க பயன்படுத்த வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து அவர்களை பல் துலக்க வைக்க வேண்டும்.
சிறுவயதிலேயே பல் விலக்க சொல்லிக்கொடுத்தால் தான் வளரும் போது அவர்களுக்கு தானாக பற்களை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் வரும்.
0 comments:
Post a Comment