தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவம் வழங்கப்படாமையினால்தான்
நான் அதிருப்தியடைந்துள்ளதாக
கருத்தொன்றுபரப்பபட்டுள்ளது.
யதார்த்தம் அதுவல்ல - விளக்குகிறார் ஹசன் அலி
கட்சியின்
பொதுச் செயலாளருக்குரிய
அதிகாரங்கள் எவருடைய அனுமதியும் ஆலோசனையும் இன்றி
கட்சித் தலைமையினால்
குறைக்கப்பட்டுள்ளன. அதனால்தான் கட்சியின்
தேசிய மாநாட்டில்
கலந்து கொள்ளவில்லை
என ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸின்
பொதுச் செயலாளர்
ஹஸன் அலி
தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸின்
தேசிய மநாட்டில்
கலந்து கொள்ளமை
தொடர்பில் கருத்து
கூறியபோதே அவர்
இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் குறிப்பிடுகையில்,
கட்சியின்
தேசிய மாநாட்டின்
போது தலைவர்
அமைச்சர் ரவூப்
ஹக்கீம் ஆற்றிய
உரையில் தேசிய
மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்கள் பற்றி மிகவும்
மோசமான வார்த்தைப்
பிரயோகங்களைப் பயன்படுத்தியிருந்தார்.
பகிரங்கமாக
நடைபெற்ற தேசிய
மாநாட்டில் அவ்வாறான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்த
வேண்டிய அவசியம்
இல்லை.
எனினும்
தலைவர் ரவூப்
ஹக்கீம் கட்சிக்குள்
பிரச்சினை ஏதும்
இருந்தால் அது
தொடர்பில் கட்சிக்குள்ளேயே
பேசி தீர்வு
காண வேண்டும்
என தற்போது
ஊடகங்கள் மூலம்
தெரிவிக்கிறார். ஆனால் அவர் அதனை முதலில்
செய்திருக்க வேண்டும்.
அவர்
அதனை செய்திருந்தால்
வரவேற்கத்தக்க விடயமாக இருந்திருக்கும். எனினும் அவர்
பிரச்சினை தொடர்பில்
கட்சிக்குள் பேசி தீர்வு காணாமல் அதனை
தேசிய மாநாட்டில்
பகிரங்கமாகப் பேசி வீண் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மேலும்
தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவம் வழங்கப்படாமையினால்தான்
நான் அதிருப்தியடைந்துள்ளதாக
தவறான கருத்தொன்று
பரப்பபட்டுள்ளது. ஆனாலும் யதார்த்தம் அதுவல்ல.
கட்சியின்
செயலாளருக்குரிய அதிகாரஙகள் குறைக்கப்பட்டமையே
அதிருப்திக்கான பின்னணியாகும். மேலும் பொதுச்செயலாளரின் அதிகாரக் குறைப்பானது தலைவரின் தனிப்பட்ட
செயற்பாடாகும்.
ஏனெனில்
அதிகாரக் குறைப்பு
தொடர்பில் என்னிடமோ,
வேறு உறுப்பினர்களிடமோ
உயர்பீடத்திடமோ ஆலோசிக்காமல் தலைவர் அதனை மேற்கொண்டுள்ளார்.
தேசிய
மநாட்டில் கலந்து
கொள்ளாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை
எடுப்பது தொடர்பில்
உயர்பீடம் தீர்மானிக்கும்
என தலைவர்
குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறாயின்
கட்சிச் செயலாளரின்
அதிகாரக் குறைப்பு
தொடர்பில் உயர்பீடத்தின்
ஆலோசனை பெற்றிருக்க
வேண்டும். ஆனால்
அதனையும் அவர்
செய்யவில்லை. மேலும் செயலாளரின் அதிகாரக் குறைப்பக்கு
எதிராக குரல்
கொடுத்தவர்களும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.
கட்சியின்
தேசிய மாநாடு
நடைபெறுவதற்கு முன்னர் சமரசப் பேச்சுவார்ததை நடைபெற்றது.
அதன் பிரதிபலனாக
செயலாளருக்குரிய அதிகாரங்ளை மீளவும் வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது.
அது தொடர்பில்
நடவடிக்கை எடுப்பதற்கு
பிரதிநியொருவரையும் தலைவர் நியமித்தார்.
எனினும்
அந்தப் பிரதிநிதி
இரு தினங்களின்
பின்னர் என்னை
தொடர்பு கொண்டு
'கட்சியின் உயர்பீடச் செயலாளர் பதவியினை தாங்கள்
ஏற்றுக் கொள்கிறீர்களா
?' என வினவினார்.
ஆனால்
அந்தப் பதவியில்
இருப்பவர் தேர்தலில்
போட்டியிட முடியாது.
ஆகவே அப்பதவியை
பொறுப்பேற்க என்னை வேண்டிக் கொண்டமை தொடர்பில்
எனக்கு அதிருப்தி
உள்ளது.
எனவே
இவ்வாறான காரணங்களினால்
தான் நான்
தேசிய மாநாட்டில்
கலந்து கொள்ளவில்லை.
அதனை விடுத்து
தற்போது தேசியப்பட்டியல்
விவகாரத்தை மாத்திரம் காரணம் காட்ட முனைவது
தவறான வழிமுறையாகும்.
இதேவேளை
தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவத்தை எனக்கு வழங்குவதற்கான நோக்கம்
இல்லையெனில் ஏன் என்னை தேசியப்பட்டியலில் பெயர் குறிப்பிட வேண்டும். அதனை
விடுத்து தேர்தலில்
களமிறக்கியிருக்கலாம். அதனையும் தலைமை
செய்யவில்லை.
ஸ்ரீ
லங்கா முஸ்லிம்
காங்கிரஸ் கடந்த
காலங்களை மீள்பரிசீலனை
செய்துகொண்டு பயணிக்க வேண்டியுள்ளது. கட்சியின் முன்னால்
பாரிய பொறுப்புகள்
உள்ளன. அந்தப்
பொறுப்புகளை பிரதானப்படுத்தியே ஒவ்வொரு செயற்பாடும் அமைய
வேண்டும்.
நல்லாட்சி
அரசாங்கத்தினூடாக இனப்பிரச்சினை உட்பட ஏராளமான பிரச்சினைகளுக்க
தீர்வு காண
வேண்டியுள்ளது. மேலும் அரசியலமைப்பு தொடர்பில் தீர்க்கமான
முடிவெடுத்து செயற்பட வேண்டியுள்ளது. இவ்வாறான முரண்பாடுகளினால்
கட்சி நடவடிக்கைகள்
பாதிக்கப்படக்கூடாது என்று
தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment