மட்டக்களப்பில் இடம்பெற்ற தீயினால் வதை செய்யப்பட்ட
சிறுமி யுஸ்ரிக்கான
நீதி வேண்டி போராட்டப் பேரணி
மட்டக்களப்பு,
காத்தான்குடிப் பிரதேசத்தில் 10 வயதுடைய சிறுமிக்கு சூடு
வைத்த குற்றச்சாட்டில்
கைது செய்யப்பட்டுள்ள
சிறுமியின் தந்தையையும், தந்தையின் இரண்டாவது மனைவியையும்
பிணையில் விடுவிக்க
வேண்டாம் எனக்கோரி
மட்டக்களப்பு நீதிமன்றின் முன்னால் ஆர்ப்பாட்டம் இன்று
முன்னெடுக்கப்பட்டிருந்தது.
தேசிய
தௌஹீத் ஜமாஅத்
அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில்
சிறுவர் உரிமை
ஆர்வலர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இப்படிப்பட்ட
அநியாயங்களைப் புரிகின்றவர்களுக்கு பிணை வழங்கும்போது அவர்கள்
சமூகத்தில் தங்களை குற்றமற்றவர்களாகக் காட்டிக் கொண்டு
கௌரவத்துடன் நடமாட வழியுள்ளதால் குற்றங்கள் தொடர்ந்தும்
இடம்பெற வாய்ப்பு
ஏற்படுகின்றது.
இதனைத்
தடுக்கும் முகமாக
இப்படியான சிறுவர்
மற்றும் பெண்கள்
மீதான துஷ்பிரயோகங்களில்
ஈடுபடுபவர்களுக்கு விசாரணை
முடியும் வரை
பிணை வழங்கக்
கூடாது என
ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியுள்ளனர்.
காத்தான்குடி
ஆறாம் குறிச்சியில்
வசிக்கும் சிறுமியின்
சித்தி சூடு
வைத்ததாகவும் இதனால், சிறுமியின் உடம்பில் எரிகாயம்
காணப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி பிரதேச
செயலக சிறுவர்
பாதுகாப்புப் பிரிவிற்கு கடந்த வெள்ளிக்கிழமை தகவல்
கிடைத்துள்ளது.
இதனைத்
தொடர்ந்து, காத்தான்குடி பிரதேச செயலக சிறுவர்
அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் சிறுமியின்
வீட்டுக்குச் சென்று சிறுமியின் தந்தை மற்றும்
தந்தையின் இரண்டாவது
மனைவியிடமும் விசாரணை செய்துள்ளனர்.
இந்தநிலையில்,
பாதிக்கப்பட்ட சிறுமியை காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில்
சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பில்
விசாரணை செய்த
காத்தான்குடிப் பொலிஸார் சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.
சித்திரவதைக்குள்ளானதாகக்
கூறப்பட்டுள்ள சிறுமியின் தாய் கடந்த மூன்று
வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார்.
இதன்
பின், சிறுமியின்
தந்தை மற்றுமொரு
திருமணம் செய்த
நிலையில் முதல்
மனைவியின் இரண்டு
பிள்ளைகளும் தந்தையின் இரண்டாவது மனைவியிடமே இருந்து
வந்துள்ளனர்.
இந்தநிலையில்
கடந்த 14ஆம்
திகதி நீதிமன்றில்
நிறுத்தப்பட்ட சந்தேகநபர்களை எதிர்வரும்
28ஆம் திகதி
வரை விளக்கமறியலில்
வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி
எம். கணேசராசா
உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன்,
பாதிக்கப்பட்ட சிறுமியை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின்
சட்ட வைத்திய
நிபுணரின் ஆலோசனையிலும்,
அவரின் கண்காணிப்பிலும்
சிகிச்சை அளிக்குமாறும்
நீதவான் பணித்துள்ளார்.
இந்த
ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான பெண்கள், சிறுவர்கள் கலந்துகொண்டு
சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்கக் கூடாது என
வலியுறுத்தி சந்தேகநபர்களின் படங்களை தாங்கிய பதாகைகளை
ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment