சூப்பர் சிங்கர் 5 முதல் இடம் பிடித்தார் ஆனந்த் அரவிந்தாக்ஷன்

ரூ 75 லட்சம் மதிபுள்ள டவுன் ஹவுஸ் பரிசாக வழங்கப்பட்டது.



விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று  சூப்பர் சிங்கர், இந்நிகழ்ச்சி கடந்த ஆண்டு முதல் திருச்சி,கோவை மற்றும்  சென்னையில் ஆடிசன் நடத்தி முடிக்கப்பட்டு இறுதிச்சுற்று சென்னையில் நேற்று நடைபெற்றது.
சூப்பர் சிங்கர் 5-ன் இறுதிச்சுற்றில் பரீதா, ராஜ கணபதி, சியாத், ஆனந்த், லட்சுமி என ஐந்து பேர் போட்டியிட்டார்ர்கள்.இவர்களில் பரீதாவும் ராஜகணபதியும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மற்ற மூன்று பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் .பரீதா, ஆனந்த், சியாத் ஆகிய போட்டியாளர்களுக்குப் பலரும் ஆதரவு தெரிவித்து ந்தார்கள்.
தமிழகத்தின் பிரம்மாண்ட குரலுக்கான தேடல் என்கிற அடைமொழியுடன் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் பாடகர்கள் மற்றும் தமிழ்த் திரையிசை உலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சி, சென்னை டி.பி. ஜெயின் கல்லூரியில் நேற்று 6 மணி முதல் நடைபெற்று இரவு 12 மணிக்கு முடிவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் சற்று தாமதமாக 12.45 மணி அளவில் முடிவுகள் அறிவிக்கப்பட்டது .
இதில் ஆனந்த் அரவிந்தாக்ஷன் முதல் இடத்தை பிடித்தார்.
முதல் இடத்தை பிடித்த ஆனந்த் அரவிந்தாக்ஷக்கு (இந்திய ரூபா மதிப்பில்) ரூ 75 லட்சம் மதிபுள்ள டவுன் ஹவுஸ் பரிசாக வழங்கப்பட்டது.
பரீதா, இரண்டாம் இடத்தை பிடித்தார் இவருக்கு (இந்திய ரூபா மதிப்பில்) ரூ 10 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.
746 வாக்குகளுடன் மூன்றாம் இடத்தை பிடித்த ராஜ கணபதிக்கு பத்து லட்சம் பரிசு வழங்கப்படது.

நான்காம் இடத்தை பிடித்த லட்சுமி மூன்று லட்சமும், ஐந்தாம் இடத்தை பிடித்த சியாத்க்கு  இரண்டு லட்சம் பரிசு வழங்கப்படது

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top