நாடளாவிய ரீதியில் மருத்துவ தொழிற்சங்கங்கள்

எதிர்வரும் 29ஆம் திகதி வேலைநிறுத்தம்!


நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் தயாராக இருப்பதாக மருத்துவ தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக மருத்துவ சேவைகள் தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 29ஆம் திகதி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக இந்தச் சம்மேளத்தின் தலைவர் அஜித்.பீ.திலகரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த வேலைநிறுத்தத்தில் மருந்தாளர்கள், ஆய்வக விஞ்ஞானிகள், உடல் சிகிச்சை, மற்றும் கதிரியக்க வல்லுனர்கள் உள்ளிட்டோர் இணைந்துக் கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top