உயிரோடு இருக்கும் மஹிந்தவை மரணிக்கச்
செய்துள்ள
வடமேல் மாகாண கல்வி
திணைக்களம்
வடமேல் மாகாண கல்வி திணைக்களத்தின் ஊடாக அந்த மாகாண பாடசாலைகளில் 10ஆம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வித்தியாசமான பரீட்சை வினாத்தாள் ஒன்று வழங்கப்பட்டுள்ளமையால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
அந்த வினாத்தாளில் குறிப்பிடப்பட்டிருந்த கேள்வி,
தன்னால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நல்ல விடயங்களையும் தனது புத்தகத்தில் பதிவு செய்து மரணிக்கும் சந்தர்ப்பத்திலும் அதனை வாசித்ததோடு தன்னால் நிர்மாணிக்கப்பட்ட இறுதி விகாரையின் நடவடிக்கைகளை பார்த்து விட்டு, இறுதி மூச்சு வரையில் நாட்டை பாதுகாத்த சிரேஷ்ட தலைவர் யார்?
1. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ
2. முதலாவது நிறைவேற்று ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன
3. துட்டகைமுனு மன்னன்
4. மகா பராக்கிரமபாகு மன்னன் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இன்னமும் உயிரோடு இருக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இறுதி மூச்சை விட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள இந்த வினாத்தாள் வடமேல் மாகாண கல்வி திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment