உலமா கட்சித் தலைவரின் கருத்தை மறுக்கின்றார்
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம்
நடைபெற்ற
முஸ்லிம் காங்கிரஸின்
தேசிய மாநாட்டில்
எந்தவித கலாச்சார
சீர்கேடுகளும் இடம்பெறவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம்
தெரிவித்துள்ளார்.
அரசாங்க
தகவல் திணைக்களத்தில்
இன்று நடைபெற்ற
ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பாலமுனையில்
நேற்று நடைபெற்ற
முஸ்லிம் காங்கிரஸின்
தேசிய மாநாட்டில்,
இஸ்லாமிய கலாச்சாரத்திற்கு
பாதிப்பு ஏற்படுத்தும்
வகையில் சில
கலை நிகழ்ச்சிகள்
ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக
உலமா கட்சித்
தலைவர் கலாநிதி
முபாறக் மௌலவி
குற்றம் சுமத்தியிருந்தமை
குறிப்பிடத்தக்கது.
இது
தொடர்பில் அமைச்சரிடம்
ஊடகவியலாளர்களினால் கேள்வியெழுப்பப்பட்டபோதே அவர் இவ்வாறு
தெரிவித்தார்.
குறித்த
சம்பவம் தொடர்பில்
ஊடகங்களிலும் பரவலாக கருத்துகள் வெளிவந்துள்ளன.
ஆனால்,
அவ்வாறான சீர்கேடுகள்
எதுவும் இடம்பெறவில்லை
என கட்சியின்
தலைவர் ஹக்கீம்
தெரிவித்தார்.
ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க
மற்றும் எதிர்க்கட்சி
தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட
அனைத்து முக்கியஸ்த்தர்களும்
கலந்து கொண்ட
இந்த மாநாடானது
தேசிய ஒருமைப்பாட்டினை
வெளிப்படுத்தி நிற்கின்றது என கூறினார்.
இதன்காரணமாக
இலங்கையில் வாழும் வேடுவர்கள் அவர்களின் கலாச்சார
நிகழ்வை அரங்கேற்ற
கலை நிகழ்ச்சிகளை
ஏற்பாடு செய்திருந்தனர்.
இதனையே பலர்
தவறாக புரிந்து
கொண்டு இருப்பதாக
ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம்
தெரிவித்தார்.
0 comments:
Post a Comment