வீட்டுக்கு கிளம்பும் அவசரம்

டாக்டரின் அலட்சியத்தால்

13 மாத குழந்தையின் உயிர் பறிபோனது!


டாக்டரின் அலட்சியம் காரணமாக 13 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் பிரித்தானியாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் க்லேஹால் பகுதியில் உள்ள க்லெஹால் அவன்யூவில் வசித்து வருபவர்கள் வஜிட் ஆலாம் மற்றும் நசியா ஆலாம்.
இவர்களது 13 மாத குழந்தையான சாரா ஆலாமுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அருகில் உள்ள A&E மருத்துவமனையில் காலை 7 மணியளவில் அனுமதித்தனர்.
அப்போது குழந்தையின் நிலை ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக தாதி தெரிவித்துள்ளார்.
பின்னர் இரவு பணியில் இருந்த டாக்டர் வீட்டுக்கு கிளம்பும் அவசரத்தில் குழந்தைக்கு ஒன்றுமில்லை என்றும் வீட்டுக்கு அழைத்து செல்லலாம் என்றும் கூறியுள்ளார்.
இதையடுத்து பெற்றோரும் குழந்தையை வீட்டுக்கு அழைத்து சென்றனர். சிறிது நேரம் கழித்து குழந்தை பேச்சு மூச்சு இல்லாமல் இருந்துள்ளது.
இதையடுத்து மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். எனினும் குழந்தையை காப்பாற்ற முடியாமல் போனது.
மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட 4 மணி நேரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில் சாராவின் மரணத்துக்கு அ டாக்டரின் லட்சியமே காரணம் என அவளின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மரணவிசாரணை நடத்தும் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக அறிவிக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top