பொத்துவில்
கவிஞரின் மருத்துவச் செலவுக்கு
வீடுதேடிச் சென்று உதவிய அமைச்சர் ரிசாத் பதியுதீன்,
கைத்தொழில்,
வர்த்தக அபிவிருத்தி
அமைச்சர் ரிசாத்
பதியுதீன் நோயினால்
பாதிக்கப்பட்டிருந்த கவிஞர் ஒருவரின்
வீடு தேடிச்
சென்று மருத்துவச்
செலவுக்கு பெருந்தொகைப்
பணம்கொடுத்து உதவியுள்ளார்.
கிழக்கிலங்கையின்
அம்பாறை மண்
ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் கட்சிக்கு
உரமிட்டு வளர்த்த
மண்ணாகும். அதிலும் குறிப்பாக கல்முனை, பொத்துவில்
பகுதிகள் முஸ்லிம்
காங்கிரசின் கோட்டைகளாகும்.
எனினும்
இங்குள்ள மக்களின்
துன்ப, துயரங்களில்
அக்கட்சியினர் ஒருபோதும் பங்கேற்பதோ, தேவையான உதவிகளை
வழங்குவதோ இல்லை.
தெரிவிக்கப்படுகின்றது
இந்நிலையில்
மிக நீண்ட
காலமாக நரம்புபாதிப்பு
நோயொன்றினால் பாதிக்கப்பட்டிருந்த பொத்துவில்
கவிஞர் மஜீத்தின்
வீடு தேடிச்
சென்ற அகில
இலங்கை மக்கள்
காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன்,
கவிஞரின் மருத்துவச்
செலவுக்காக ஐந்து இலட்சம் ரூபாயை அன்பளிப்புச்
செய்துள்ளார்.
அத்துடன்
குறித்த உதவி
நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும்
கவிஞரின் மனதை
நோகடித்துவிடக் கூடாது என்பதற்காக கவிஞரால் வெளியிடப்பட்ட
நூல் ஒன்றைக்
கொள்வனவு செய்து
அதற்கு வழங்கும்
விருதாக இத்தொகையை
அமைச்சர் அன்பளிப்புச்
செய்துள்ளார்.
இதன்
மூலம் கவிஞர்
மஜீத் தனது
மேலதிக சிகிச்சைகளுக்காக
இன்று இந்தியா
புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அமைச்சரின் பணிகளுக்கு
மத்தியில் அவர்
செய்திருக்கும் இந்த மாபெரும் உதவி பெரிதும்
பாராட்டத்தக்கது.தேர்தல் காலம் மட்டுமே வாக்காளர்களை
தேடிச்செல்லும் அரசியல் வாதிகளுக்கு மத்தியில் தான்
எந்த வகையிலும்
அறிந்திராத ஒரு கவிஞனின் வீடு தேடிச்சென்று
அவர் உதவியிருப்பதானது
இலங்கை கலை
இலக்கிய உலகின்
கவனத்தை ஈர்த்துள்ளது.சமூக வலைத்தளங்களில்
அமைச்சரின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.